பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?
பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?
மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம். இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான். விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே. இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம்.
முடிவுகளை முன்னரே யோசித்தல்
பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம், இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான். இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும், பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது. இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது.
ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான். சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்கள் நடைபெறும். இலக்கு இதுதான் என்று தீர்மானித்துவிட்டால் இதனை எளிதாக செய்யலாம். அப்படி தெரியாதபோது, முடிவுகளைப் பற்றி தீர்மானிப்பது பயன் அளிக்காது.
பழக்கம் என்பது சங்கிலித்தொடரான செயல்களைக் கொண்டது. மணியடித்துவிட்டு நாய்க்கு சோற்றைப் போடும் பழக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் நாய்க்கு பழக்கமாகிவிட்டால், மணி அடித்தவுடன் அதன் வாயில் உமிழ்நீர் சுரந்து ஒழுக தொடங்கிவிடும். உணவுக்கான எதிர்பார்ப்பில் நாய் இருக்கும். அதுதான் மணி ஒலித்துவிட்டதே?
கருத்துகள்
கருத்துரையிடுக