ரொமான்டிக் மருத்துவரின் புதிய மருத்துவப்படை - டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 - கொரிய தொடர்

 https://image.kpopmap.com/2020/01/dr-romantic-season-2-cover.jpg

 

டாக்டர் ரொமான்டிக் 

சீசன் 2


https://kocowablog.imgix.net/2020/01/Lee-Sung-Kyung-Ahn-Hyo-Seop-So-Ju-Yeon-DrRomantic2.png?auto=compress%2Cformat&fit=scale&h=539&ixlib=php-3.3.0&w=1024&wpsize=large

புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டீச்சர் கிம், தலைமை நர்ஸ், அவருக்கு உதவியாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. வில்லனும் கூட மாறவில்லை. ஆனால் சூழல்கள் மாறியுள்ளன. 


டாக்டர் ரொமான்டிக் என்பது டீச்சர் கிம்தான். அவர்தான் டைட்டில் ரோல் நாயகன். டோல்டம் மருத்துவமனையில் தலைமை மருத்துவர். தனது குழுவில் உள்ளவர்கள் தவறு செய்தால் இவரது கண்டிப்பு பல்லை உடைப்பேன், தவறு செய்த கையை வெட்டுவேன் என்பதாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்தான் அவர்களுக்கு தேவையானபோது உதவியும் செய்வார். ஒருவருக்கு உதவி தேவையென்றால் எந்த இடத்திலும் இருக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்யும் இவரது ஸ்டைல் டோல்டம் வட்டாரத்தில் புகழ்பெற்றது. 

சாதாரணமாக இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சிகிச்சை கிடைக்கும். இதனால் மருத்துவமனை பெரிதாக சம்பாதித்து கொடுப்பதில்லை. ஆனால் அவசர சிகிச்சை என்றால் டோல்டம் மருத்துவமனையில் டீச்சர் கிம் என்பதுதான் அந்த வட்டாரத்தில் பிரபலமான நம்பிக்கை. 

 https://i.pinimg.com/736x/de/e2/69/dee2694476077d47139cf3fec900a746.jpg

முதல்பகுதியில் கங் டங் ஜூ, யூன், டூயிங்பம் ஆகியோரின் வருகை, டீச்சர் கிம் அவர்களிடம் நடந்துகொள்வது, தலைமை மருத்துவமனையிலுள்ள மருத்துவர் டூ டீச்சர் கிம் பற்றி அறிந்து அவரை அவமானப்படுத்தி வெளியே அனுப்ப முயல்வது, அதை தடுக்க கிம் முயல்வது, அவருக்கு பிரசிடெண்ட் ஆதரவாக இருப்பது ஆகிய சம்பவங்கள் நடைபெற்றது. இதோடு டூயிங் பம்மின் யூன் மீதான  ஒருதலைக்காதல், டாக்டர் கங் யூன் ஆகியோரின் காதல் உறுதியாவது ஆகியவை சுவாரசியமான காட்சிகளாக இருந்தன. கூடவே சேர்மன் செயற்கை இதயமாற்று சிகிச்சையை டீச்சர் கிம்மிடம் செய்துகொள்ள விரும்புகிறார். ஏன் என்று பலர் கேட்டும் அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அதனை டீச்சர் கிம் வெற்றிகரமாக செய்து தனது திறமையை தலைமை மருத்துவமனைக்கு நிரூபிக்கிறார். இதன் காரணமாக மருத்துவமனை இயக்குநர் டூ, அவமானப்படுகிறார். அவர் செய்த தில்லாலங்கடி வேலைகளும் பத்திரிகையாளர் மூலம் வெளியே தெரிய வர தனது பதவியை இழக்கிறார். 

இதில் மற்றொரு சுவாரசியம் டாக்டர் டீச்சர் கிம் என்பவரின்  உண்மையான பெயர் பூயங் சோ என்பது. அவர் எதற்காக பெயரை மாற்றிக்கொண்டு டோல்டமில் பணிபுரிகிறார் என்பதுதான். இந்த உண்மையை அவருடன் வேலை செய்யும் மருத்துவர்கள் பின்னாளில்தான் அறிகிறார்கள்.டாக்டர் கிம்முக்கும் மருத்துவமனை இயக்குநருக்கும் நடக்கும் மோதலில் கிம் மணிக்கட்டில் காயம் படுகிறார். திரும்ப மருத்துவமனைக்கு வந்து தனது பணிகளை செய்கிறார் என்பதோடு முதல் பகுதி முடிகிறது. காதல் கதையில் டாக்டர் யூன், கங்டங் ஜூவிடம் தனது காதலை ஒப்புக்கொள்கிறார். 

2

இரண்டாவது பகுதியில் டாக்டர் கிம், தலைமை மருத்துவமனைக்கு இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தேவைக்காக வருகிறார். அங்கு மருத்துவமனை இயக்குநராக முன்னர் அறுவை சிகிச்சை துறை தலைவராக இருந்து டாக்டர் டூவின் எடுபிடியாக செயல்பட்டவர் இருக்கிறார். அவர் கிம்மை சந்திக்க மறுக்கிறார். அப்போது லைவ் சர்ஜரி நடக்கிறது அதில் பேராசிரியர் பார்க் செய்யும் தவறை டாக்டர் கிம் நோட்ஸ் எழுதிக்கொடுத்து சரி செய்கிறார். இது பேராசிரியருக்கு கடந்த காலத்தை நினைவூட்டுவதோடு கிம் மீது கோபம் கொள்ளவும் காரணமாகிறது. 

https://1739752386.rsc.cdn77.org/data/thumbs/full/231541/650/0/0/0/dr-romantic-2.jpg

தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் சியோஜின் கடன் பிரச்னையால் கஷ்டப்படுபவன். அவன் வேலையை சரியாக செய்தாலும் முன்னர் ஒரு டாக்டர் செய்த ஊழலை வெளிக்கொண்டு வந்தவன். இதனால் அவனுக்கு எதிரிகள் அதிகமாக உள்ளனர். அவன் எங்கு வேலைக்கு சேர்ந்தாலும் அவனை அங்கிருந்து துரத்த எல்லாவித முயற்சிகளும் செய்கிறார்கள். இந்த நிலையில் அவன் கிடைக்கும் தற்காலிக வேலைகளை செய்து வட்டி மாபியாவிடம் தப்பிக்கொண்டிருக்கிறான். அவன் கூடவே படிக்கும் மருத்துவக் கல்லூரி தோழி இருக்கிறார். சிறப்பாக அறுவை சிகிச்சை ஆராய்ச்சி அறிக்கை தயாரிப்பவள்தான். ஆனால் அவருக்கு மனப்பதற்றம் பிரச்னையாக இருக்கிறது. தேர்வில் அதிக மார்க் எடுப்பவள் பிராக்டிக்கல் என்றால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள். இதனால் ஆபரேஷன் ரூமில் தடுமாறுகிறாள். இந்த இருவரையும் டீச்சர் கிம் தனது மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். எதற்காக என்பதுதன் ஐந்து எபிசோடுகளில் கதையாக விரிகிறது. 

view on Mxplayer

komalimedai team




 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்