கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

 

 

 

 

Q&A: Bhramar Mukherjee at the forefront of Big Data ...

 

 

நேர்காணல்

பேராசிரியர் பிராமர் முகர்ஜி


உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள். இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா?


இல்லை. உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார், டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன. இதற்குப்பிறகு ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம். கேரளா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம். அசாம், ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது.


இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?


மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம். 5,500 என இறப்பு எண்ணிக்கை உச்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.


ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நோய்த்தொற்று எண்ணிக்கை கூடியது. கொரோனா வைரஸின் வகை மாறியதால்தான் இந்த நோய்த்தொற்று வேகம் கொண்டதா?


நாம் இதுபற்றி கவனமாக இருக்கவேண்டும். கொரோனா வைரஸ் புது வகை மாதிரி உருவானது மட்டும் நோய்த்தொற்றுக்கு காரணம் இல்லை. கோவிட் -19 நோய் பற்றிய சரியான புரிதலை நாம் பெறவில்லை. கொரோனா பற்றிய பாதுகாப்பை இந்தியா தவறாக புரிந்துகொண்டுவிட்டது. கொடூரமான வைரஸை நாம் எந்த பாதுகாப்பும் கண்காணிப்பும் இல்லாமல் தவற விட்டுவிட்டோம்.


இங்கிலாந்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ், வேகமாக இந்தியாவில் பரவியது. மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப்பில் நோய் பரவியுள்ளதை நீங்கள் பார்க்கலாம். நோய்பரவலை சரியாக கணித்த நிலப்பரப்பு ரீதியான தகவல் நமக்குத் தேவை. ஆனால் நோய்த்தொற்று கூடியுள்ள நிலையிலும் கூட நமக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.


நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதிய வைரஸ் வேகமாக பரவுவதன் காரணம் என்ன?


வைரஸ் அமைதியான முறையில் மெல்ல பரவிவருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்தில் 1918இல் இன்ப்ளூயன்சா வைரஸ் இம்முறையில் பரவியது. இந்தியாவில் இப்போது கொரோனா பரவுவது இம்முறையில்தான். பொதுமுடக்கத்தை நாம் தொடங்கினால்தான் நோய்த்தொற்றின் பரவலை குறைக்க முடியும். நோய்த்தொற்று பரவலை அதிகரிக்கும் நிகழ்ச்சிகளை தடுத்து கட்டுப்படுத்தவேண்டும்.

the hindu



கருத்துகள்