உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?
உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?
உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் பல்வேறு விதமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றன.
உலகில் உயிரினங்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று தெரியுமா? உணவு, நீர், இருப்பிடம், வெப்பநிலை, வெளிச்சம். வெப்பநிலை என்பது அடிக்கடி மாறினால் உயிரினங்கள் வாழ்வது சிக்கலாகிவிடும். ஆனால் இதெல்லாம் தாண்டி இருட் படர்ந்த குகைகளில் உயிரினங்கள் வாழ்கின்றன.
காற்று
சுற்றுப்புறத்திலுள்ள காற்று முக்கியமானது. இதனை உயிரினங்கள் சுவாசித்துத்தான் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனை ரெஸ்பிரேஷன் என்று குறிப்பிடுகின்றனர்.
வெப்பம்
இதனை ஒளி, வெப்பம் என இருவகையில் கூறலாம். குறிப்பிட்ட வெப்பநிலை அப்படியே தொடரவேண்டும். அப்படி இல்லாதபோது உயிரினங்கள் வாழ்க்கை நிலையாக தொடர்வது கடினம்.
இருப்பிடம்
இருப்பிடம் என்பது உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்கும், பிற எதிரி விலங்குகளிடமிருந்து ஓய்வெடுக்கவும்தான். இப்படி இடம் இல்லாதபோது, உயிரினங்கள் எளிதாக வேட்டையாடப்பட வாய்ப்புள்ளது.
உணவு
உணவுதான் உயிரினங்களுக்கு ஆற்றலை அளித்து அதனை பூமியில் தாக்குப்பிடிக்க உதவுகிறது. இதில் நேரடியாக தாவரங்கள், அல்லது அதனை உணவாக கொள்ளும் விலங்குகள் என உயிரினங்கள் உணவுகள் மாறுபடும். இதன் அடிப்படை, உணவுதான் இனப்பெருக்கம், வேறிடங்களுக்கு செல்ல என பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது.
நீர்
பல்வேறு உயிரினங்கள் பூமியில் வாழ்வதற்கு முக்கியமான காரணம், நீர்தான். இதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதோடு, அதனையே வாழ்வதற்குமான அடிப்படையாக கொண்டுள்ளன. இதனால் நீர் தாவரங்கள் மண்ணில் வேரூன்றி வளர முக்கியமானவையாக உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக