ஒடிஷாவில் அழிவைச் சந்தித்து வரும் கடலோர கிராமங்கள்! - கடல்மண் அரிப்பால் நேரும் பரிதாபம்!

 

 

 

 

 

Despite the advancing sea, coastal-erosion refugees in ...

 

 

 

 

ஒடிஷாவில் அழியும் கிராமங்கள்


ஒடிஷாவில் உள்ள கேந்திர பாரா மாவட்டத்தில் கடற்புற பகுதியில் ஏழு கிராமங்கள் உள்ளன. இதில் மொத்தம் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு மெல்ல கடல் மணல் உள்ளே புகுந்து வருவதால், அங்குள்ள மக்கள் வேறிடம் நோக்கி நகர்ந்து வருகி்ன்றனர். மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் அடிபம்பு கூட அரைப்பகுதி மணலால் மூடப்பட்டுவிட்டது. இங்குள்ள கால்நடை கொட்டில், கோவிலைக் கூட கைவிட்டு மக்கள் வெளியேறத்தொடங்கிவிட்டனர்.


மக்கள் கைவிட்ட அந்த கோவிலுக்கு வந்து போகும் ஒரே பார்வையாளர் பக்தர் பிரபுல்ல லெங்கா என்பவர்தான். கடல்மண்ணில் ஏற்பட்ட அரிப்பால், ஏழு கிராமங்களும் ஒடிஷா மாநில வரைபடத்தில் இருந்து விரைவில் காணாமல் போகவிருக்கிறது. 571 குடும்பங்களுக்கு வேறு இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. பிஜூ புக்கா கர் யோஜனா எனும் திட்டத்தின்படி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது.


இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களுக்கு கூலித்தொழிலாளிகளாக சென்று வேலை செய்து வருகிறார்கள். உள்ளூரில் வேலை என்றால் மீன்பிடிப்பதும், விவசாயமும் மட்டும்தான். இதில் உயிர்பிழைக்கலாம் என்றாலும் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு.


தொண்ணூறு தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரையில் ஒடிசாவில் 580 கி.மீத தொலைவு நிலப்பரப்பு கடல்நீர் அரிப்பால் பாதிக்கப்பட்டு காணாமல் போயுள்ளது. தோராயமாக 28 சதவீதம் எனலாம். இந்த ஆய்வை சென்னையிலுள்ள கடல் ஆராய்ச்சி மையம் செய்துள்ளது.


indian express

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்