நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

 

 

 

Nail Biting Stock Photos, Pictures & Royalty-Free Images ...

 

நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு. காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது, பதற்றத்தில் நகம் கடிப்பது, யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது, தோளை அடிக்கடி குலுக்குவது, கண்களை விரித்து பார்ப்பது, அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான்.


இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம். நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள். இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள். இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது.


நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள். இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம், முடியின் நிறம், உறக்கம், மனநிலை, புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை ஏற்பட்டிருக்கின்றன என மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன.


பத்தாண்டுகளுக்கு முன்னர் நியாண்டர்தால் மனிதர்கள் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று அக்கருத்து பல்வேறு ஆராய்ச்சி ஆதாரங்களின் படி மாறியுள்ளது. தற்போது மனிதர்களின் உடலில் 1.8 முதல் 2.6 சதவீதம் வரையிலான மரபணுக்கள் ஆப்பிரிக்க தன்மை கொண்டதாக உள்ளது என கூறப்படுகிறது.


நவீன மனிதர்களுக்கு ஏற்படும் இதயநோய், உடல் பருமன், நிக்கோடின் பாதிப்பு ஆகியவற்றுக்கு நியாண்டர்தால் மனிதர்களின் மரபணு மாற்றம் கொண்டதாக மாறியுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள பயோபேங்கில் தகவல்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உணவுப்பழக்கம், குணம் பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்றுள்ள மனிதர்களின் நிறம், உணவுப்பழக்கத்தின் மாறுபாட்டிற்காக நியாண்டர்தால்களை நாம் கூறினாலும் முன்னர் அவர்களின் பல்வேறு தன்மைகள் குணங்கள் மாறுபட்டவை என்பதை நாம் ஏற்க வேண்டியுள்ளது.


நியாண்டர்தால் மக்கள் புறஊதாக்கதிர்வீச்சை பெற்று சமாளித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருந்தனர். இது ஆப்பிரிக்காவில் உள்ள தன்மையை விட மாறுபட்டது என்கின்றனர் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்.


பிபிசி


கருத்துகள்