முதலில் வாங்கிய காரை என்னால் மறக்கவே முடியாது! - அனு மாலிக், இசையமைப்பாளர்

 

 

 

 

 

Anu Malik Wiki, Age, Wife, Family, Biography & More - WikiBio

 

 


இசையமைப்பாளர் அனுமாலிக்


இந்துஸ்தான் டைம்ஸ்

தினேஷ் ரஹேஜா


இருபத்திரெண்டு வயதில் உங்கள் தொழில் எப்படி இருந்தது?


டீனேஜ் வயது அல்லவா? எனது முதல் பாடலை அன்றைய சூப்பர்ஸ்டார் ஆஷா போன்ஸ்லேவுடன் தொ்டங்கினேன். ஹண்டர்வாலி 77 என்ற படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மோகன் சோடி தொடங்கினார். அதற்கு இசையமைக்க எனது தந்தை சர்தார் அலி ஒப்பந்தமானார். அப்போது ஏதோ ஒரு பாடலை நான் ஹம்மிங் செய்துகொண்டிருக்க இயக்குநர் உடனே என்னைப் பிடித்து பாடல் ஒன்றைப் பாட வைத்துவிட்டார். அப்போது நான் வாய்ப்புக்காக பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன்.


காற்றில் காதல் இருப்பதாக தெரிகிறதே?


நான் எனது மனைவி அஞ்சுவை அவளுடைய இருபத்தியொரு வயதில் திருமணம் செய்துகொண்டேன். அப்போது எனக்கு வயது இருபத்திரெண்டு. மிதிபாய் கல்லூரியில் நாங்கள் படித்தபோது காதல் மலர்ந்து உறவு உருவானது.


முதல் பாடலை எப்போது எழுதினீர்கள்?


நான் அஞ்சுவை காதலித்துக்கொண்டிருந்தேன். அவளை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். அவள் திடீரென என்னைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்துவிட்டாள். எனவே பயந்துபோய் கண்டாலாவுக்கு ஓடிப்போய்விட்டேன். அங்குதான் முதல் பாடலான தேக்கோ பாரிஷ் ஹோ ரஹி ஹை என்ற பாடலை எனது காதலிக்காக உருவாக்கினேன்.


உங்களுடைய ஸ்டைல் என்ன?


நீளமான முடி வளர்ப்பது, நீளமான பூட்ஸ் அணிவது எனக்குப் பிடிக்கும்.


ஃபிட்னெஸ் அறிவுரை ஏதாவது?


நான் பீச்சில் நிறைய தூரம் நடப்பேன். கிரிக்கெட் விளையாடுவேன்.


மகிழ்ச்சியான சம்பவம் ஏதாவது கூறுங்கள்…


என் நண்பர் அஜயிடமிருந்து கருப்பு நிற பியட் காரை வாங்கியதுதான். அதற்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை, மிளகாய் எல்லாம் கட்டிவைத்தேன். திடீரென இரவு இரண்டு மணிக்கு எழுந்து அதனைப் போய் பார்த்திருக்கேன். அந்தளவு நான் வாங்கிய காரை விரும்பினேன்.


மோசமான காலகட்டம் பற்றி சொல்லுங்கள்?


வேலையில்லாதபோது மன அழுத்தத்தில் சிக்கி தனியாக இருப்பேன். அப்போது அம்மா தூங்கினால் உனக்கு எந்த உதவியும் கிடைக்காது. . எழுந்து வெளியே போய் உனக்கு வேலை வேண்டும் என்று கேட்டுப்பார் என்பார். அதுதான் அந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கை கொடுத்தது.




கருத்துகள்