இடுகைகள்

நேர்காணல் - விஷால் பரத்வாஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயதணிக்கை படங்கள் ஆபத்தானவை! - விஷால் பரத்வாஜ்

படம்
2002 ஆம் ஆண்டு மக்தி திரைப்படத்தை தொடரந்து ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஓதெல்லோ, மெக்பெத் ஆகிய புகழ்பெற்ற நாடகங்களை ஓம்காரா, மெக்பூல், ஹைதர் என்ற பெயர்களில் இந்தி திரைப்படங்களாக்கினார் இசையமைப்பாளரும் இயக்குநருமான விஷால் பரத்வாஜ். தற்போது விஷாலின் படாகா என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. சரண்சிங் பதிக்கின் Do Behnin என்ற சிறுகதையை திரைப்படமாக்கியுள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் வாழ்ந்தவர் நீங்கள். கிராமங்களை மையமாக கொண்டே பல்வேறு திரைப்படங்களை எடுத்துள்ளீர்கள். என்ன காரணம்?  சிறு, குறு கிராமங்களிலுள்ள முரண்பாடுகளை என்னை அதிகம் ஈர்க்கின்றன. அதில்தான் திரைப்படத்திற்கான கதைகள் எளிதாக கிடைக்கின்றன. இன்றும் கிராமங்களில் வாழ்வதற்கான போராட்டங்களை நீங்கள் பார்க்க முடியும். வாழ்வின் ஆழமான அனுபவத்தை நீங்கள் இங்குதான் அனுபவ பூர்வமாக உணரமுடியும்.  பஷாரத் பீரின்  Curfewed Nights படித்து அதனை திரைப்படமாக திரும்ப கூறவேண்டும் என விரும்பினேன். நகரங்களைக் கடந்த பேசப்படவேண்டிய விஷயங்கள் கிராமங்களில் உள்ளது என உறுதியாக நம்புகிறேன்.  வேறு ஏதாவது நாட்டில் திரைப்