இடுகைகள்

ஆப்பிள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்!

படம்
  ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்! அண்மையில், பீப்பர் என்ற செயலி  இணையத்தில் பிரபலமானது.  இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம். ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில

அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!

படம்
  மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது.   மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.   மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது. பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம்.   ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டு சமாளித்துவிடலாம்.

வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

படம்
  ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது! உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர்.  ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்! உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.   பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1 உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாள

புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

படம்
  ஆஃப்டர் ஸ்டீவ் டிரிப் மிக்கில் ஹார்ப்பர் கோலின்ஸ் 599 ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார்.  புதின்  பிலிப் ஷார்ட்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல்.  தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின் ஜேமி பார்ட்லெட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை. இவர் ஹார்வர்டில் படித்தவர்.

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார்.  புரோச

மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆப்கள்!

படம்
  போர்ட்டல் இயற்கையான அழகிய காட்சிகள் எப்போதும் மனதை ரிலாக்ஸ் செய்யும். அப்படி உலகம் முழுக்க உள்ள அனைத்து அழகான அருவி, மலைத்தொடர், புல்வெளி ஆகியவற்றை இந்த ஆப்பில் பார்த்து ரசிக்கலாம். பக்கத்தில் எரிச்சலூட்டும் நண்பர்களின் பேச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்க முடியும்.  இந்த ஆப் ஆண்ட்ராய்ட் , ஆப்பிளிலும் இலவசமாக கிடைக்கிறது.  ஸ்மைலிங் மைண்ட் உங்கள் குடும்பமே மன அழுத்தத்தில் தவித்தாலும் இந்த ஆப், உங்களை அதிலிருந்து மீட்கும். தியானம் செய்வதற்கான ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பயன்படுத்தி தினந்தோறும் ஆப்பை திறந்து வைத்து உழைத்தால் மன அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது.  பிக்மென்ட் தினத்தந்தி தங்க மலரில் வரும் வண்ணமடிக்கும் பகுதிதான். ஆனாலும் மன அழுத்தத்தை சிறப்பாக போக்குகிறது. ஆப்பை திறக்கிறீர்கள். பூசணி, பப்பாளி என இஷ்டம் போல பெயிண்டை சிதறடித்து வண்ணம் பூசலாம். மெல்ல கஷ்டங்கள் குறையும் வாய்ப்பிருக்கிறது.  டோகா லைப் வேர்ல்ட் இது ஒரு பொம்மை வீடு. இங்கு ஏராளமான கதை மாந்தர்கள் உண்டு. இங்குள்ள சில டாஸ்க்குகளை முடித்தால் சுவாரசியமாக பொழுது போக்கும். வீட்டையே இரண்டாக மாற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆ

ஐடியாக்களை குறித்து வைக்க, ஓவியங்களை வரைய உதவும் ஆப் 2021! - சிறந்த ஆப்கள்

படம்
  லூமாஃபியூஷன் lumafusion ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப். இது வீடியோ எடிட்டிங் செய்வதற்கான மென்பொருள். இதில் எடிட்டிங், ஆடியோ மிக்ஸ் என பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். நீங்கள் இருக்குமிடத்தில் இதனை செய்து பிறகு  மேலும் விஷயங்களைச் சேர்க்க ஃபைனல் கட் புரோ மென்பொருளுக்கு கூட மாற்றிக்கொள்ளலாம். ஏகப்பட்ட ஃபைல் பார்மேட்டுகளுக்கு இதனை மாற்றுவது சிறந்த வசதி மைண்ட் நோட் Mind node 12 பி பஸ்ஸில் நெருக்கியடித்துக் கொண்டு வடபழனி செல்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து மூளைக்குள்ளும் டிராபிக் ஆகும்படி யோசனைகள் வரலாம். அதனை எல்லாம் மைண்ட் நோட்டில் பதிவு செய்து வைத்தால் பின்னாளில் உங்களுக்கு உதவும். படம். எழுத்து, இணைய முகவரி, ஐகான் என பல்வேறு வகையில் உங்களது குறிப்புகளை சேர்த்து வைக்கலாம். ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப் இது. ஸ்பார்க் spark  ஆப்பிளில் மெயில் வசதியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஸ்பார்க் அந்த லெவலுக்கு கிடையாது என்றாலும் எது முக்கியமான மெயில் என்று செட் செய்தால் அழகாக அரேஞ்ச் செய்து வைக்கிறது. இதனால் மெயில்களை கையாள்வது எளிதாகிறது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்ஸில் இதனை இலவசமாக பயன்படுத்தலாம்.  Netnews wire ஐஓஎஸ்ஸில

சிறந்த ஆப்கள் 2021! - ஆப்பிள் போன்களுக்கான சிறந்த ஆப்ஸ்கள் இவை

படம்
  ஒன் பிளாக்கர் இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை பார்க்கும்போது ஏராளமான குப்பைகள், போனில் சேரும். அதனை அழித்து ஒடுக்கத்தான் ஒன் பிளாக்கர் உதவுகிறது. இதனை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். ஆப்பிளுக்கான ஆப் இது. காசு கொடுத்து வாங்கவேண்டும். உலிசெஸ்  எழுதுவதற்கான மென்பொருள்தான். இதைப் பயன்படுத்தி பா.ரா போல எழுதி தள்ளிவிட முடியுமா என்று உறுதியாக சொல்லமுடியாது. எழுதுவதை க்ளவுட்டில் சேமிக்க முடியும். இதனால் அதனை எந்த வடிவில் பெற்று பயன்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கும் ஆப் இது. இதுவும் ஆப்பிளுக்கான கட்டண ஆப்தான்.  மேஜிக் கீபோர்ட்  முதலில் வெளியான ஆப்பிளின் கீபோர்ட் அந்தளவு, சிறப்பாக செயல்படவில்லை. புதிய ஆன்ஸ்க்ரீன் கீபோர்ட் நீண்ட நேரம் வேலை செய்யவும் சிறப்பாக உள்ளது. இதனை டேப்லெட்டில் எளிதாக இணைத்து பணியாற்ற முடிவது முக்கியமானது.  ஃபைல் ப்ரௌசர்  ஆப்பிளின் ஃபைல்ஸ் ஆப் இது. இதில், பல்வேறு க்ளவுட் சேவைகளைப் பெறலாம். மேக், டேப்லட், மேசைக்கணினி என எதிலும் இணைத்துக் கொண்டு கோப்புகளைப் பெறலாம்.  ஸ்டஃப் இதழ்

சிறந்த டிவி, கேட்ஜெட், சூழலுக்கு உகந்த நிறுவனம், பிராண்ட்! - சந்தைக்குப் புதுசு

படம்
                  சி றந்த கேட்ஜெட் சோனி பிளேஸ்டேஷன் 5 இந்த விளையாட்டு அதன் தரத்திலும் விலையிலும் கூட மக்களின் மனம் கவர்ந்துள்ளது . அதிநவீன டிவி இல்லாவிட்டாலும் அதிலும் இதனை இணைத்து விளையாட முடியும் . எக்ஸ்பாக்ஸை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுள்ளது . இந்த வகையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது . ஃபிட்பிட் ஏஸ் 3 குழந்தைகளின் தூக்கம் , விளையாட்டு ஆகியவற்றை இதன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம் . கலோரி போன்றவற்றை போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கையில் கட்டிக்கொள்ள எளிதாக இருக்கிறது . அதிகநேரம் இதனை அணிந்திருந்தாலும் கூட எரிச்சல் ஏற்படுவதில்லை . வார நாட்களில் சில முறை சார்ஜ் செய்யும்படி இருக்கும் . சிறந்த கண்டுபிடிப்பு சாம்சங் மைக்ரோஎல்இடி எல்இடி ஓஎல்இடி போன்ற திரைகளில் உள்ள பலவீனத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மைக்ரோஎல்இடி வாங்கலாம் என்று முடிவெடுக்கும்படி புதிய டிவியை உ்ருவாக்கியிருக்கிறார்கள் . ஒருவகையில் சாம்சங்கின் முடிவு எதிர்காலத்திற்கான முன்னடி என்று கூட சொல்லலாம் . பத்தாயிரம் மணி நேரங்கள் பாதுகாப்பு எ

இரண்டாவதாக ஓடி ரேசில் வென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சூப்பர் பிஸினஸ்மேன் என்று யாரையாவது கூற வேண்டுமெனில் யாரைக் கூறலாம் ? பில்கேட்ஸ் அல்ல . பில் ஹியூலெட் , டேவிட் பெக்கார்டு ஆண்டி குரோவ் , கூகுளின் இரட்டையர்களை கூறலாம் . ஆனால் பலருக்கும் மனதில் வரும் ஒரே பதில் ஆப்பிளை மக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் . இப்போது டிம் குக் , நிறுவனத்தின் லகானைப் பிடித்து செலுத்தினாலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது , அதனை எளிமைப்படுத்துவது ஆகியவற்றில் மாஸ்டர் ஸ்டீவ்தான் . வாடிக்கையாளர் பயன்படுத்தும் ஆப்பிள் பொருட்கள் , எளிதாக இருக்கவேண்டும் . அதன் பயனர் கையேட்டை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என மெனக்கெட்டார் . ஆப்பிளின் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழாவைப் போல நடத்தப்படும் . எப்படி பொருளை மார்க்கெட்டிங் செய்வது என்பதை ஸ்டீவ் தனது அனுபவங்கள் வழியாக கற்றிருந்தார் . அதனால்தான் ஆப்பிள் என்றால் ஸ்டீவ் , ஸ்டீவ் என்றால் ஆப்பிள் என்று இன்றுமே கூறப்படுகிறது . 1955 ஆம் ஆண்டு தனது அம்மாவின்

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

ஆப்பிளின் எதிர்காலத் தோற்றம்!

படம்
கணினி உலகில் தன்னை தனித்துவமான நிறுவனமாக காட்டிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் அளவு யாரும் மெனக்கெட்டு இருக்க மாட்டார்கள். பலரும் கணினியின் வேகம் பற்றி கவலைப்பட்டபோது, கணினியின் அழகைப் பற்றி ஸ்டீவ் ஜாப்ஸ் கவலைப்பட்டார். இன்று மேக் கணினி என்றால், அது வீடியோ, கிராபிக் டிசைனர் சார்ந்தது என்று மாறிவிட்டது. அங்கு விண்டோஸ் உள்ளே நுழைய அணுவளவும் வாய்ப்பில்லை. காரணம், ஆப்பிளின் சமரசம் இல்லாத தரம்.  தற்போது தனது எதிர்காலத்திற்கான கணினி தோற்றத்திற்கு ஆப்பிள் காப்புரிமை பெற்றுள்ளது. முழுக்க கண்ணாடியால் ஆனது போன்ற தோற்றத்தை புதிய ஆப்பிள் கணினி கொண்டுள்ளது. சற்றே திரை வளைந்தது போல செம ஸ்டைலாக இருக்கிறது. பழைய கணினியில் கீபோர்ட் தனியாக இருக்கும். கணினிக்கு ஏற்றபடி வெள்ளை நிறத்தில் கொடுத்திருப்பார்கள். இம்முறை புதிய கணினியில் விசைப்பலகை கணினியுடன் அப்படியே இணைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக இருக்கிறது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி கணினியின் வடிவமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.  விரைவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இன்றே கவனமாக பார்த்து புக் செய்யப் பாருங்கள். நன்றி -

சிறந்த காலண்டர் ஆப்ஸ்கள் உங்களுக்காக....

படம்
giphy வாழ்க்கையை திட்டமிட ராணிமுத்து காலண்டர்களை ஒருகாலத்தில் நம்பியிருந்தோம். ஆனால் இன்று டெக்னிக்காக நாம் நிறைய மாறி உள்ளோம். பல விஷயங்களை டிஜிட்டலாக மாற்றி விட்டோம். அல்லது நிறுவனங்கள் மாற்றி விட்டார்கள். எனவே நாமும் மாறுவது எதிர்காலத்திற்கு நல்லது.  Fantastical 2 ஆப்பிளில் காலண்டர் ஆப் உள்ளது. ஆனால் கம்பெனியோடு வருவது எப்போது சிறப்பாக இயங்காது. டிசைன் அப்படித்தான். எனவே 49 டாலர்களை கொடுத்து இந்த ஆப்பை வாங்குங்கள். இதனை குரல் மூலமும் இயக்க முடியும். ஐக்ளவுட், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றிலும் இதனை இணைத்துக்கொள்ள ஆதரவு வழங்குகிறார்கள். இரண்டு எழுத்துகளை எழுதினால் முழுவார்த்தையும் கண்டுபிடித்து நிரப்பிக்கொள்வதால், டக்கென திட்டமிட்டு பட் டென காரியத்தைப் பார்க்கலாம்.  ஆப்பிளுக்கு மட்டுமான ஆப் இது.   Business Calendar 2 சிங்கம் 1,2,3 போல பெயர் தெரிந்தாலும் வேலை செய்வதற்கு ஏற்ற ஆப் இது. ஆண்ட்ராய்டில் சிறப்பாக இயங்குகிறது. இலவச பதிப்பில் விளம்பரத் தொல்லைகள் உண்டு. ஆனாலும் கூகுள் காலண்டர் லெவலுக்கு நிறைய வசதிகளைத் தருகிறார். காசு கொடுத்து வாங்கும் முன்பு இலவச பத