அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!

 









மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது.

 மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.  

மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது.

பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம்.  ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டு சமாளித்துவிடலாம். ஆனால், பிக் அப் ட்ரக் போன்ற வாகனங்களை மின் வாகன பிரிவில் கொண்டு வருவது கடினம். இந்த வாகனங்கள், பிற வாகனங்களை இழுத்துச் செல்லவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது பொருட்களை கொண்டு செல்ல உதவுகின்றன. எனவே மின் வாகனங்களை உருவாக்கும்போது அதன் திறன், பருவகாலங்களை சமாளிக்கும் செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும்.

அடிப்படைக் கட்டமைப்பு

அமெரிக்காவில் கூட போதுமான அளவுக்கு மின் வாகனங்களுக்கான சார்ஜ் செய்யும் மையங்கள் இல்லை. ஃபோர்ட், ஜிஎம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெஸ்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களின் சார்ஜ் மையங்களை பயன்படுத்தி வருகின்றன. இரு வாகன நிறுவனங்களில் மின் வாகனங்களை வாங்குபவர்கள் டெஸ்லாவின் 17 ஆயிரம் சார்ஜ் மையங்களை பயன்படுத்தி தங்கள் வாகனத்தை சார்ஜ் செய்யலாம்.

தூரமாக பயணம் செய்கிறீர்கள். ஹோட்டலில் அல்லது பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். பிறகு காரைப் பயன்படுத்த எடுக்கிறீர்கள் என்றால் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. பேட்டரி பழுதாகி இருக்கும். அப்படி இருந்தால் காரை இயக்க முடியாது. சார்ஜ் செய்யவும் முடியாது. காரணம், அனைத்து இடங்களிலும் சார்ஜ் மையங்கள் கிடையாது. அமெரிக்க அரசு, சார்ஜ் மையங்களுக்கென 7.5 பில்லியன் டாலர்களை செலவழித்து ஐம்பது மைல்களுக்கு ஒரு சார்ஜ் மையம் அமைக்க முயன்று வருகிறது. ஆனால், அதே அமெரிக்காவில் மேற்குப்பகுதிகளில் இன்னும் சார்ஜ் மையங்களை அமைக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. எடிசன், பல்பை உருவாக்கினார். ஆனால், பல்புகள் விற்றதற்கு காரணம் மின்சார அமைப்பு, அந்த வலைப்பின்னல் ஏறகெனவே உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் பல்புகளை வாங்கிப் பொருத்தினால் வேலை முடிந்தது. ஆனால் மின் வாகனங்கள் விஷயத்தில் அப்படியில்லை. அதை வாங்குவதற்கு முன்னரே சார்ஜ் மையங்களை நாடெங்கும் நிறுவ வேண்டும். அப்படியில்லாதபோது மின்வாகனங்களாக காரோ , பைக்கோ வாங்கி பயன்படுத்த முடியாது.

மென்பொருள் பிரச்னைகள்

மின்வாகனங்களை பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல பராமரிக்கவேண்டியதில்லை என்று கூறுவார்கள். இதற்கு காரணம், மின் வாகனங்களில் நகரும் பாகங்கள் குறைவு. குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே மின்சாரத்தால் இயங்கும்படி அமைத்திருப்பார்கள். ஆனால் இதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. பயன்படுத்தும் மென்பொருட்களும், இயற்கையும் மிகப்பெரிய சிக்கல்கள்.

இன்று கார்களில் பாடல்கள் கேட்பது தாண்டி  சுற்றுலாவுக்கான திட்டம், சார்ஜ் மையங்கள் என பல்வேறு விஷயங்களை தேடும் ஒரு கணினி போல மாற்றிவிட்டனர். இதில்தான் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய இயக்கமுறைகள் உள்ளே வருகின்றன.

 உலகில் விற்கும் 90  சதவீத மின் வாகனங்களில் மேற்சொன்ன இரு இயக்கமுறைகளுக்கு ஆதரவு உண்டு. நீங்கள் ஆப்பிள் போன் வைத்திருந்தால் அதை ஆண்ட்ராய்டில் இணைத்து பயன்படுத்தலாம். பிரச்னை கிடையாது. சில கார் நிறுவனங்கள் இந்த இயக்கமுறைமை இல்லாமல் தனியாக தங்களுக்கென இயக்கமுறைமையை உருவாக்குகிறார்கள். ஒரு காரை வாங்கும்போது பயன்படுத்தும் இயக்க முறைமை அதன் மென்பொருள், அப்டேட், அதிலுள்ள பிரச்னைகள் என நிறைய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

கார்களில் சேகரிக்கும் தகவல்கள் கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. அவர்கள் அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். தானியங்கி கார்கள் என வரும்போது, இயக்க முறைமை தாக்கப்பட்டால்  தகவல் திருடப்பட்டால்…காரில் செல்பவரின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை. எதிர்காலத்தில் கிடைக்கலாம்.

மின்வாகனங்களை சார்ஜ் செய்வது,  பெட்ரோலை லாக் பண்ணி போடுங்க என்றால் கையில் விட்டுவிட்டடு பிடித்து எரிபொருளை மிச்சம் செய்து காசு பார்க்கும்  சின்னத்தனமான விஷயமல்ல. ஆனால் இங்கு ஒரு வேலை செய்கிறார்கள். காருக்கு சார்ஜ் போட ஆப் ஒன்றை தரவிறக்கவேண்டும். அதன் வழியாக பயனர் பயன்படுத்தும் மின்சாரத்தைக்  கணக்கிடுகிறார்கள். ஒருவர் காருக்குப் பயன்படுத்தும் மின் அளவுக்கு ஏற்ப காசு கட்ட வேண்டும். ஆனால் அந்தளவ எளிதாக ஆப்பை தரவிறக்கி சார்ஜ் மையத்தில் இணைப்புச் செய்து பயன்படுத்த முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை. முதல் தலைமுறை மென்பொருள் எந்திரங்கள் என்பதாலா என்னவோ பிரச்னை இன்னும் தீரவில்லை.

 

 

 

 

 

வால்ஸ்ட்ரீட் ஜர்னல்

கிறிஸ்டோபர் மிம்ஸ்

 ஆங்கில மூலக்கட்டுரையின் தமிழாக்கம்.

https://in.pinterest.com/pin/618259855117369786/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்