காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் |
காற்றில்
உள்ள வேதிப்பொருட்கள்
காற்றில்
என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல
வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து
கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை.
அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது
பிரச்னைகள் தொடங்குகின்றன.
வளிமண்டலத்திற்ள்
ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை.
காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள்
உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம்
கொண்டவை.
வெப்பமோ வெப்பம்
வெப்பம் அதிகமாகிக்கொண்டே
செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது.
எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டு
உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. 1850-1900 ஆகிய தொழில்துறை வளர்ச்சி
தொடங்காத காலகட்டத்தில், இருந்த வெப்பத்தை விட இது அதிகம். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு
அதிக வெப்பத்தை பூமி சந்தித்தது.
எல்நினோ உருவாக்கம்
பசிஃபிக்
கடலில் கிழக்குப் புறமிருந்து மேற்காக காற்று வீசுகிறது இந்த காற்று காரணமாக வெப்பமான
நீர் மேற்கு பக்கம் செல்கிறது. அங்குள்ள குளிர்ந்த நீர் மேற்காக வருகிறது. எல்நினோ
சூழல், இப்படி மேற்கிலிருந்து வீசும் காற்றின் வேகத்தை குறைக்கிறது. எனவே, வெப்பமான
நீர், குளிராமல் பசிஃபிக் கடல் முழுக்க பரவுகிறது. இப்படி நடைபெறும் காலநிலை முறையை
எல்நினோ சதர்ன் ஆசிலேஷன் என்று கூறுகிறார்கள். பசிஃபிக் கடலில் காற்று வீசும் முறை
மாறும்போது இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பெய்யும் மழை அளவு குறைந்துவிடுகிறது.
காற்று சுழற்சி
என்பது இயற்கையானது. இதன் மாற்றங்களை இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிட்டு வந்தனர்.
இப்போது உலகளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் காற்றின் சுழற்சி முறையிலும் மாறுபாடு
உருவாகி வருகிறது.
2
பூமியின்
வளிமண்டலத்தில் 10 ஆயிரம் கி.மீ . தூரத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன. எக்ஸோஸ்பியர்,
தெர்மோஸ்பியர், மீசோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர். ட்ரோஸ்பியர் அடுக்கில்,
தட்பவெப்பநிலை சார்ந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன. இங்குதான் பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை
கவர்ந்து வைத்து பூமிக்கு அனுப்புகின்றன. இந்த அடுக்கு 16 கி.மீ. தூரம் உள்ளது.
ஸ்ட்ராடோஸ்பியர்
அடுக்கில் ஓசோன் வாயு, சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சுகளை வடிகட்டுகிறது. மீசோஸ்பியர்,
சற்று கடினமான கவசம் போல. விண்ணிலிருந்து வரும் விண்கற்களை எரித்து பூமியைக் காக்கிறது.
விண்கற்கள் என்பது உதாரணத்திற்காக பால்வெளியிலிருந்து வரும் எந்த பொருளும் பூமிக்குள்
எளிதாக வரமுடியாது.
தெர்மோஸ்பியர்
அடுக்கு, சற்று அடர்த்தியானது. அதிக வெப்பத்தைத் தாங்குகிறது. ஏறத்தாழ 2000 டிகிரி
செல்சியஸ். ஈகுவடார் அருகே கடினமாக இருக்கும் அடுக்குகள் வட, தென் துருவம் அருகே மென்மையாக
உள்ளன. வளிமண்டல ஐந்து அடுக்குகளுமே வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் தீர்மானிப்பதில்
முக்கியப் பங்காற்றுகின்றன.
பூமியின்
முக்கிய ஐந்து அம்சங்களைப் பார்ப்போம். அவை அடுக்குகள்.
பயோஸ்பியர்
- உயிரினங்கள், லித்தோஸ் பியர் – பூமியின் அடித்தட்டு, அட்மாஸ்பியர், கிரையோஸ்பியர்
- பனி, ஹைட்ரோஸ்பியர் - நீரடுக்கு.
பயோஸ்பியர்
– லித்தோஸ்பியர் அடுக்குகளில் ,தாவரங்களிடமிருந்து பெறப்படும் கார்பன் கரிம எரிபொருளாக,
எண்ணெய்யாக மாறுகிறது.
கடல் நீர்,
கடல் வழித்தடத்தில் தொடர்ச்சியாக சுழற்சியாகி சென்றுகொண்டே இருக்கிறது. இதன் வழியாக
வெப்பம் நீரின் வழியாக கடத்தப்படுகிறது. இதை வரைபடமாக வரையும்போது சிவப்பு, நீலம் என இரு நிறத்தில் வரைகிறார்கள்.
புரிந்துகொள்ள எளிமை. அவ்வளவுதான்.
இதில் சிவப்பு என்பது கடல் நீரின் மேற்புற வெப்ப
மின்சாரம், நீலம் என்பது கடலின் கீழ்ப்புறத்தில் செல்லும் குளிர்ச்சியான மின்சாரம்.
கடலில் செல்லும் நீரோட்ட மின்சாரம் என்பது நீரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். மாறுபடும்
மின்னோட்டம் சரியானபடி நடக்கவில்லையென்றால் அனைத்து நாடுகளிலும் வெப்பம் அதிகரிக்கும்.
மூலநூல்
சிம்ப்ளி
கிளைமேட சேஞ்ச்
டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
image - pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக