காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

 









 

காலநிலை மாற்றம்

பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும்.

இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது.

பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக உருவான காலநிலை மாற்றம் மனிதர்கள், சமூகம், அவர்களின் வாழ்க்கை என பலவற்றையும் தீவிரமாக பாதிக்கிறது. எதிர்காலத்தில் மாறும் காலநிலைக்கு ஏற்றபடி நம் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வது முக்கியம்.

பனி எலும்பை பதம்பார்க்கும் துருவப்பகுதி தொடங்கி வெயில் கொளுத்தும் பாலைவனப்பகுதி தொடங்கி அனைத்து இடங்களையும் காலநிலை இணைக்கிறது. நிலப்பரப்பு, கடல் வளிமண்டலம் என அனைத்தையும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து தகவல் பெறலாம். ஐஸ் ஏஜ் காலகட்ட காலநிலை மாற்றத்தை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் தற்போதைய சூழலை யூகிக்க முயல்கின்றனர். தற்போது ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம், உலக நாடுகளில் பலவற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

தட்பவெப்பநிலை

உங்கள் ஸ்மார்ட்போனில் வெதர்.காம் வலைத்தளத்தின் மூலம் உங்கள் உள்ளூர் தட்பவெப்பநிலையை எளிதாக அறியலாம். கூகுள் தனது ஆண்ட்ராய்ட் போனின் மூலம் பயனாளரின் இருப்பிடத்தை அறிந்து கட்டாயமாக வானிலையை கூறி வருகிறது. இந்த வகையில் தட்பவெப்பநிலை என்பது நிமிடங்கள், மணி நேரம், நாள் என்ற அளவில் மாறிக்கொண்டே இருக்கும். காலநிலை மாற்றத்தைக்கூட கணிக்கலாம். ஆனால் ஓரிடத்தின் தட்பவெப்பநிலையைக் கணிப்பது கடினம்.

குறிப்பிட்ட இடத்தில் வரையறுக்கப்பட்ட சூழலை, தட்பவெப்பநிலை என்கிறார்கள். இப்படி இந்த சூழ்நிலை உருவாக நீராவியாதலும், காற்றும் உதவி செய்கின்றன. வெப்பம், குளிர், உலர்ந்துபோனது, ஈரமானது என பல்வேறுவிதமாக தட்பவெப்பநிலை அமைகிறது.  நீண்டகால தட்பவெப்பநிலை தகவல்களின் அடிப்படையில் காலநிலை மாற்றம் அமைகிறது. முப்பது ஆண்டுகள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தை ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். முடிவெடுத்து மக்களுக்கு அறிவிக்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தை நாம் எதிர்பார்க்கிறோம். தட்பவெப்பநிலை என்பதே நமக்கு கிடைக்கிற ஒன்று. என ஆய்வாளர் ராபர்ட் ஹெய்னின் கூறுகிறார்.

செம ஹாட் மச்சி

சூரியன் எஃப்எம் போல நாம சொல்ல முடியாது. ஆனாலும் சூரியனின் கதிர்வீச்சு மூலம் பூமி பெறும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சூரியனின் வெப்ப ஆற்றல் பூமிக்கு வருவதால்தான் உயிரினங்கள் வாழ முடிகிறது. அதேசமயம், இந்த ஆற்றல் முழுவதுமாக பூமியால் உறிஞ்சப்படுவதில்லை. இதில் பெருமளவு ஆற்றல் வானுக்கு பிரதிபலிக்கப்பட்டு செல்கிறது. இப்படி செல்லும் ஆற்றல், பசுமை இல்ல வாயுக்களால் தாக்குதலுக்கு உட்பட்டு திரும்பி வருகிறது. இதுவே பூமி சூடேறுவதற்கு காரணமாக உள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கும்போது பூமிக்கு திரும்பி வரும் சூரிய வெப்ப ஆற்றலும் கூடிக்கொண்டே செல்கிறது.


 

 

 

 

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

image -

https://in.pinterest.com/pin/571535008974605155/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்