உடற்பயிற்சி செய்பவர்களுக்கான பொருட்கள் - சந்தைக்குப் புதுசு

 






நத்திங் இயர் 2

ஜே பேர்ட் விஸ்டா 2




உடற்பயிற்சி செய்பவர்களுக்கான புதிய பொருட்கள்



எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர்



எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர்

இந்த கருவி தூங்குபவரின் இதயத்துடிப்பு, தூக்கத்தின் தரம், நேரம் ஆகியவற்றைக் கணிக்கிறது. படுக்கையின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளலாம். தூங்கும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. உங்களது தூக்கத்தை தரமாக மாற்றும் பழக்கத்தை எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர் உருவாக்குகிறது.

பிரிவெய்ல் ஸ்மார்ட்வேர்


பிரிவெய்ல்

உடலில் அணியும் ஆடைகளின் மூலம் உடலின் இயல்புகளைக் கண்டுபிடித்து கூறலாம். நொடிக்கு ஆயிரம் டேட்டா பாய்ண்டுகளை சேகரிக்கிறது. அணியும் வகைப் பொருட்களைப் பொறுத்தவரை பிரிவெயிலின் கண்டுபிடிப்பு முக்கியமான முன்னேற்றம் என்று கூறலாம். உடற்பயிற்சி செய்யும் நேரம், அதில் செலவாகும் சக்தி ஆகியவற்றை இந்த உடையிலுள்ள சென்சார் மூலம் அறியலாம்.

ஹைபரைஸ் ஹைபர்வோல்ட் 2 புரோ

மசாஜ் செய்யும் கன்கள். இதைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடலை சற்று நெகிழ்வாக்கிக் கொள்ளலாம். இதில் பல்வேறு வேக அளவுகள் உள்ளன. பயன்படுத்த எளிதாக உள்ளது.

தெராகன் புரோ

இதே நிறுவனத்தில் வந்த முந்தைய தயாரிப்புகளை விட சற்று ஸ்மார்ட்டாக இருக்கிறது. இதில் மசாஜ் கன்னின் வேகத்தை எளிதாக ஆப் மூலம் செட் செய்யலாம். மேலும், இதன் செயல்பாட்டை உங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். முந்தைய மாடல்களை விட மசாஜ் கன்னின் சத்தமும் மிக குறைவு.

ஆரா ரிங் ஜென் 3


ஆரா ரிங் ஜென் 3

மூன்றாம் தலைமுறை ஆரா ரிங் ஜென் 3, அதிக சென்சார்களோடு களமிறங்கியுள்ளது. மோதிரத்தை கையில் அணிந்தாலே உங்களது இதயத்துடிப்பு தொடங்கி தூக்கத்தின் தரம் வரையில் போனில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஏராளமான விஷயங்களை இந்த மோதிரம் கொண்டுள்ளது.

 

லூமன்

மூச்சுக்காற்றை சோதித்து அதிலுள்ள சிக்கல்களை விளக்கிக் கூறுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு செய்த பயிற்சியில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதை மாற்ற வேண்டும் என்பதை லூமனைப் பயன்படுத்தினாலே அறியலாம். உடல் வளர்சிதை மாற்றத்தைக் கூட இக்கருவியால் அறிய முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


ஃப்ரீலெட்டிக்ஸ் ஆப்


ஃப்ரீலெட்டிக்ஸ்

வீட்டிலேயே அதிக உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் பயிற்சிகளை எப்படி செய்வது என விளக்கி ஏராளமான கட்டுரைகள், வீடியோக்களை வைத்திருக்கிறார்கள்.

 காசு கட்டினால் உங்களுக்கு தேவையான ஏராளமான தகவல்களை, வீடியோக்களைப் பெறலாம். உடற்பயிற்சி செய்வதில் தடுமாற்றம் இருக்கிறதா, தினசரி நேரம் ஒதுக்க முடியவில்லையா அதற்கென ஊக்கமூட்டும் ஆடியோ படிப்புகளை வைத்திருக்கிறார்கள். உடலுக்கு மட்டுமல்ல மனநிலையை மேம்படுத்தவும் பயிற்சிகள் உண்டு. இப்படி உடல், மனம் என இரண்டையும் மேம்படுத்த முயல்வது இந்த ஆப்பின் சிறப்பம்சம்.


வித்யூ ஆப்


வித்யூ ஆப்

இதை ஒலிம்பிக் தடகள வீரர் டிம் பெஞ்சமின் இணைந்து உருவாக்கியுள்ளார். ஆடியோவை அடிப்படையாக கொண்ட உடற்பயிற்சி ஆப். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆடியோ என்பதால் அதை கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்வது நன்றாக இருக்கிறது. மேலும், உடற்பயிற்சி நிலைகள் தெரியவில்லை என்றால் உடனே போனை அழுத்தி ஆடியோவுடன் வரும் அனிமேஷனைப் பார்த்தாலே போதும்.

ஜேபேர்ட் விஸ்டா 2

நீடித்து உழைக்கும் பேட்டரி, காதில் எளிதாக பொருந்தும் தன்மை, இரைச்சலைக் குறைக்கும் வசதி, ராணுவத்தில் பயன்படுத்தும் அளவுக்கு பாதுகாப்புடன் இயர் போன்கள் உள்ளன. இதில் வரும் ஒலி அளவை, தரத்தை உங்களுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நீர், வியர்வை, தூசி, நீர், அடிபட்டால் நொறுங்கும் தன்மை ஆகியவற்றுக்கு பயப்படத் தேவையில்லாதபடி உருவாக்கப்பட்டுள்ளது.

நத்திங் இயர் 2

ஆப்பிளின் ஏர்பாட்ஸ் 2க்கு போட்டியாக உருவாகியிருக்கும் படைப்பு. பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் எட்டு மணிநேர இசை மழையில் நனையலாம். ஆப்பிளோடு முழுமையாக போட்டி போட்டு வெல்லும் இயர்போன் என்று சொல்ல முடியாது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் சார்ஜ் போட்டால் 36 மணிநேரம் தாக்குப்பிடிக்கிறது. ஒளிபுகும்படியான டிரான்ஸ்பரன்ட் ஸ்டைல், குறைந்த எடை, காதில் டைட்டாக வைக்க முடிவது ஆகியவை நத்திங் இயர்போனை தனித்துவமாக மாற்றுகிறது.

மென்ஸ் ஃபிட்னெஸ் 

கருத்துகள்