வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!
தாவர உணவுமுறை |
இன்று தாவரங்களைச்
சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில்
கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள்,
பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட
சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.
தாவர உணவுமுறையில்
சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக்
கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம்.
தாவரம் சார்ந்த
உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட
முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி,
முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம்
கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து
பெறப்பட்ட பொருட்கள் இருக்காது.
சைவ உணவுகளை
எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப்
பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணமாக உள்ளது. இன்னும் சிலர்,
கோழி, ஆடு , மாடு, பன்றி என்ற உண்ணாவிட்டாலும் கடல் உணவுகளை சாப்பிடுகிறார்கள். இவர்களை
பெஸ்காடரியன் அல்லது ஃபிளெக்ஸ்டரியன்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
எடை குறைப்பிற்கு
வருவோம். இதில் காய்கறிகள் எப்படி பயன்தருகின்றன. காய்கறிகள், பழங்கள் குறைந்த கலோரிகளையும்,
அதிக நார்ச்சத்துகளையும் கொண்டவை. காய்கறிகள், பழங்களை ஒருவர் சாப்பிடும்போது, வயிற்றில்
விரைவில் பசி உணர்வு தீர்ந்து திருப்தியான உணர்வு எழுகிறது. இத்தனைக்கும் இவற்றில்
கலோரி குறைவு என்பது முக்கியம்.
அளவு என்றளவில்
இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விட ஒருவர் காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டிய
நிர்பந்தம் உண்டு. ஆனால் அப்படி சாப்பிட்டாலும் அவர் உடலில் எடை அதிகரிக்காது. உடலுக்கு
பிரச்னை ஏதும் இருக்காது. நீரும், நார்ச்சத்தும் நிறைந்து கலோரி குறைவாக உள்ளதால் உடல்
எடை நாளடைவில் குறையும் என்றாலும், இதுபற்றிய நிறைய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால்,
தாவர உணவுமுறை காரணமாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை குறைவது, தவிர்க்கப்படுவது
மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உணவுத்தட்டு
பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறி, பழங்களால் நிறைந்து காணப்பட வேண்டும். இப்படிப்பட்டவற்றில்தான்
பைடோகெமிக்கல்கள் உள்ளன.இவற்றைப் பெற பெர்ரி, பேரிக்காய், புரொகொலி, இலைக் காய்கறிகள்,
கேரட் ஆகியவற்றை சாப்பிட லாம்.
உறைய வைக்கப்பட்ட
காய்கறிகள், பழங்கள் இரண்டாம் நிலை தேர்வாக கொள்ளலாம். அப்போதைக்கப்போது விற்கும் பழங்கள்,
காய்கறிகள் முக்கியமானவை. அவைதான் முதல் தேர்வாக இருக்க முடியும். உறைய வைக்கப்பட்ட
காய்கறிகள், பழங்கள் சற்று விலை குறைந்தவை. அவற்றிலும் சத்துகள் உண்டு என்பதால், அவற்றையும்
உணவில் சேர்க்கலாம்.
தாவர உணவுமுறை
காலை உணவு
ஓட்ஸ் உடன்
இனிப்பற்ற விலங்கிலிருந்து பெறப்படாத பால், பெர்ரி பழங்கள், வால்நட், இஞ்சி.
மதிய உணவு
க்ரீம் சாலட்,
அவகாடோ, வறுத்த பட்டாணி
ஸ்னாக்ஸ்
பீநட் பட்டரில்
தோய்த்த பேரீச்சைப்பழங்கள், பாதாம் பருப்புகள், ஆரஞ்சு பழம்
இரவு உணவு
கேரட், பட்டாணி,
அரிசி நூடுல்ஸ், டோஃபு, முட்டைக்கோஸ், வேர்க்கடலை, கறி சாஸ்.
இனிப்பு
சாக்லெட் ராஸ்பெர்ரி
ஹாலி லெபோவிட்ஸ்
ரோஸி
டைம் வார
இதழ்
https://pixabay.com/photos/fruit-avocado-lemon-orange-2109043/
கருத்துகள்
கருத்துரையிடுக