இடுகைகள்

கம்யூனிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

படம்
    இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்   விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்   2019 ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது. அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்த

லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

படம்
  மோட்டார் சைக்கிள் டைரிஸ் சேகுவேரா நன்றி புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,   பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,   அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள். இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூ

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

படம்
  தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா! சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.   2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது.  முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு

உலகை மாற்றுவது எப்படி?

படம்
                        உலகை எப்படி மாற்றுவது ? இப்படி யாராவது இருபதுகளில் யோசிக்காமல் இருக்கமுடியுமா ? அனைவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தாலும் இதனை எப்படி செய்வது என்பதை அறியாமல் இருப்பார்கள் . இதனால் நல்லது செய்ய அரசியலுக்கு செல்லலாமா என சேகர் கம்முலா பட நாயகர்கள் போல யோசிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு . ஆனால் அது எடுபடவேண்டுமே ? உலகம் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை . கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ் , பூமியில் நிற்பதற்கு எனக்கு இடம் கொடுங்கள் . நான் அதனை நகர்த்தி காட்டுகிறேன் என்றார் . உலகில் மாற்றங்களை நாங்கள் தருகிறோம் என்று செயல்பட்டவர்கள் , அதன்வழியே மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள் . நேர்முகமாகவும் , மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகப்போர் குறிப்பிட்ட தலைவர்களின் ஆதிக்க வெறியால் நடந்தது என்றாலும் அதனால் பட்டினியில் விழுந்து இறந்துபோனவர்கள் மக்கள்தான் . ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து போல்ஷ்விக்குகள் ஆட்சிக்கு வந்தது மாற்றம் என்றாலும் அதனால் 20 மில்லியன் மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது . கிறிஸ்துவ மதமாற்றம் , யூத

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்ன

கோவிட் -19 நோய்த்தொற்றை கம்யூனிஸ்ட் நாடுகள் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளனவா? - ஓர் அலசல்

படம்
சோசலிச நாடுகள் கோவிட் -19 தாக்குதலில் வென்றுள்ளனவா? அவுட்லுக் டோபி சைமன் வியட்நாம், கியூபா, தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோவிட் -19 பிரச்னையை வெற்றிகரமாக சமாளித்துள்ளன. இந்த நாடுகளில் முதல் இரு நாடுகள் மட்டுமே கம்யூனிச நாடுகள். இப்போது சமூக வலைத்தளங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் முதலாளித்துவம் தோற்றுவிட்டது. கம்யூனிச   தத்துவத்தை பின்பற்றி செயல்பட்ட நாடுகள் வென்றுவிட்டன என்று கூறப்படுகிறது. இது உண்மையா? அடிப்படையில் எந்த நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவோ அந்த நாடுகள் கோவிட் -19 போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளித்து வர முடியும். மேற்சொன்ன அனைத்து நாடுகளும் சிறப்பான பொது மருத்துவமனை கட்டமைப்பைக்கொண்டே நோய்த்தொற்றை வென்றுள்ளன. அதிலும் கம்யூனிச தத்துவங்கள் கொண்ட நாடுகள் வென்றுள்ளன என்பது முழுக்க நாம் ஒதுக்கிவிடவும் முடியாது. மக்கள் நலனுக்கான மருத்துவமனைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருப்பது முக்கியமான வெற்றிக்காரணங்களுள் ஒன்று. அதேசமயம் வெற்று த த்துவங்கள் மட்டும் மக்களின் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள்

கலகக்கார கோமாளி - ஜோக்கரின் முன்கதை

படம்
ஜோக்கர் இயக்கம் டாட் பிலிப்ஸ் ஒளிப்பதிவு லாரன்ஸ் செர் இசை ஹில்டர் 1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது. அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது. படத்தின் நிறம், இசை என ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே உள்ளது. அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது. இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரா