இடுகைகள்

கார்ல்மார்க்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்ஸ் 200!

படம்
மார்க்ஸ் 200! ஜெர்மனியில் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி பிறந்த கார்ல்மார்க்ஸூக்கு இந்த ஆண்டு 200 வது பிறந்த தினம் . " மனிதகுல வரலாற்றில் கார்ல்மார்க்ஸின் சிந்தனைக்கு முக்கிய இடமுண்டு . மக்களின் தினசரி வாழ்க்கையில் நினைத்து பார்க்கும்படியாக மார்க்ஸின் கொள்கைகள் இயல்பானவை . உலகை மாற்றிய மார்க்ஸ் போன்ற தத்துவவியலாளர்களின் எண்ணிக்கை குறைவு " என்கிறார் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா . 2008 ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்ட பொருளாதார நிலைகுலைவு கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலை திரும்பி பார்க்க வைத்துள்ளது . " இன்று முகமது , ஜீசஸ் ஆகியோருக்கு நிகரான செல்வாக்கு கொண்டவராக மார்க்ஸ் மதிக்கப்படுகிறார் . உலகில் வாழும் பத்தில் நான்குபேர் மார்க்ஸின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர் " என்கிறார் Marx: A Very Short Introduction  என்ற நூலாசிரியரும் தத்துவயியலாளருமான பீட்டர் சிங்கர் .