இடுகைகள்

மேப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலியான கோட்பாடுகளை மக்கள் நம்புவதற்கு காரணம் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? பெரும்பாலான மேப்கள் ஏன் தவறாக இருக்கின்றன? பூமி உருண்டையாக இருக்கிறது. ஆனால் மேப் உள்ள தாளோ தட்டையாக இருக்கிறதே அதனால்தான். உள்ளபடியே சரியான தகவல் வேண்டுமென்றால் மேப் மிகப்பெரிதாக இருக்கவேண்டும். வரைபடத்தில் உலகத்தை எப்படி அடக்குவது என்றால் அதை சாதித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர், ஜெரார்டஸ் மெர்கேடர். 1569இல் இவர் உருவாக்கிய முறையைத் தான் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இன்று கூகுள் மேப்பில் பார்க்கும் உலகைக் கூட மெர்கேடர் காட்டும் முறையைப் பின்பற்றித்தான் பார்க்கிறோம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பல்வேறு நாடுகளின் அளவு மிகப்பெரிதாகிவிடும். சில நாடுகள் மிக சிறியதாக சுருங்கிவிடும்.  மக்கள் ஏன் போலியான பல கோட்பாடுகளை நம்புகிறார்கள்? கட்டடங்களை இடிப்பது எளிது. கட்டுவது கடினம். இதைப்போலவே வதந்திகளை உருவாக்குவது எளிது. அதனை உடைப்பது கடினம்.  நம்பிக்கை ஒருவரின் மனதில் உருவாகிறது என்றால் அதற்கு அடிப்படையாக உண்மை அல்லது பொய் இருக்கலாம். எதனை நீங்கள் நம்புகிறீர்களோ அதுதான் முக்கியம். முரட்டுத்தனமான புத்திசாலிகள் கோட்பாடுகளை உருவாக்குவதோடு அதனை பரப்பவும் செய்கின்

இந்திய மேப்பில் அட்டகாசமான இன்போகிராபிக் தகவல்கள்! - ஆச்சரியப்படுத்தும் இளைஞர்!

படம்
  ஆல் இன் ஆல் மேப்- கேள்விகள் அனைத்துக்கும் விடை உண்டு! இந்தியாவில் எத்தனை பேர் சைவ உணவு சாப்பிடுகிறார்கள், எத்தனை கேஎப்சி உணவுக்கடைகள் உள்ளன,  ஒருவரை அண்ணா என இந்தியில் அழைப்பவர்கள் எத்தனை பேர் என பல்வேறு கேள்விகளை நமக்கு கேட்கத் தோன்றும். ஆனால் இதற்கான விடைகளை மேப் வடிவில் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தியாவில் சைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக இருப்பது போல பிம்பம் உருவாக்கப்பட்டாலும், அசைவம் சாப்பிடுபவர்களின் சதவீதம் 80ஆக உள்ளது. பொதுவாக மாநில மக்களின் சாப்பாட்டு பழக்கத்தை பார்த்தால், பஞ்சாபியர்கள் இறைச்சியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்பதும், தென்னிந்தியர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள் என்பதும் தெரிய வரும். இதை மேப்பாக பார்க்க என்ன செய்வது? இந்தியா டுடே இன்போகிராபிக்ஸ் போடுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மென்பொருள் வல்லுநரான அஸ்ரிஸ் சௌத்ரியிடம் சொன்னால் போதும். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என தனித்தனியாக பிரித்து காட்டுகிறார். இதற்கு மத்திய அரசு வெளியிட்ட 2014ஆம் ஆண்டு அறிக்கைகளையும் படங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய