இடுகைகள்

தோல்தானம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோல்தானம் அவசியம் ஏன்?

படம்
தோல் தானத்தின் அவசியம்! கண்தானம் இப்போதுதான் பரவலாகத்தொடங்கியுள்ள நிலையில் தோல்தானம் பெறும் முயற்சிகள் மெல்ல தொடங்கியுள்ளன. சென்னையிலுள்ள அரசு மருத்துவமனை வட்டாரங்களில் தோல்தானம் தருபவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீள பெருமளவு தானம் பெறப்பட்ட தோலினைப் பயன்படுத்துகின்றனர். தற்போது மூளைச்சாவு அடைந்தவர்களின் தோலினை அரசு மருத்துவமனைகள் பெற்று பயன்படுத்தி வருகின்றன. “கண்தான வங்கிகளுக்கு தினசரி நான்கு ஜோடி கண்கள் கிடைக்கின்றன என்றால் தோல் தானம் தர முன்வருபவர்களின் அளவு மாதத்திற்கு ஐந்துதான்.  எங்களது விழிப்புணர்வு முயற்சியால் 2015 ஆம் ஆண்டிலிருந்து 164 பேர் தோல்தானம் தந்துள்ளனர்” என்கிறார் கோவை தனியார் மருத்துவமனை மருத்துவரான ராஜ சபாபதி. மூளைச்சாவு, இயற்கை மரணம் அடைந்தவர்களின் தோல்களை அவர்கள் இறந்த ஆறு மணிநேரத்திற்குள் தானம் பெறுவது அவசியம். வைரஸ் தொற்று, தோல் வியாதிகள், புற்றுநோய் ஆகிய பாதிப்புள்ளவர்கள் தோல்தானம் வழங்கமுடியாது. 0.6-08 மி.மீ தோலை(தனிநபரிடமிருந்து 1800ச.செ.மீ) பெறுகிறார்கள். இதனை ஐந்து ஆண்