இடுகைகள்

நோய் எதிர்ப்பு சக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

படம்
  திருப்பி அடிப்பேன் முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன.  கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம். காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குத...

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக...

நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

படம்
                  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி ? வைரஸ் பாக்டீரியா , பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான் . தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான் . இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும் . உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது . இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா் . ம் . உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன . இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல . இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன . குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன . ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது . நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்ப...

அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்குமான தொடர்பு!

படம்
- அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்கும் தொடர்பு உண்டா? வெயில், மழைக்காலத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை உடல் வறட்சி, சளி உள்ளிட்ட பிரச்னைகள், வெயில், வியர்வை, மழையின் ஈரம் ஆகியவற்றின்போது உடலில் நுண்ணுயிரிகளின் பாதிப்பால் படர்தாமரை, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. அலர்ஜியின்போது உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு எதிர்த்து போரிடுகிறது. அதன்பொருட்டு உடலின் பிற அமைப்புகளுக்கான சக்தி குறைகிறது. அதனால்தான் உடல் அலர்ஜியின்போது சோர்வுறுகிறது. அப்போது நீங்கள் வேறு வித உடல் உழைப்பில் ஈடுபட்டால், உடலில் நோய் எதிர்ப்பு பணிகள் நலிவுறும். நன்றி: லிவ் சயின்ஸ்