இடுகைகள்

அசோக்செல்வன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாலி கேலி கலாய் காதல் சினிமா - ஓ மை கடவுளே !

படம்
ஓ மை கடவுளே - தமிழ் அஷ்வத் மாரிமுத்து ஒளிப்பதிவு - விது அய்யன்னா இசை - லியோன் ஜேம்ஸ் ஒரு பெண், இரண்டு ஆண்கள். இந்த மூவரும் நண்பர்கள். பப் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, காதலித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டால்தான் லைஃப் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லுகிறார். அருகிலிருந்து தோழி, அதையேதான் யோசிக்கிறார். உடனே அருகிலிருந்த தோழனிடம் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறார். அதை மறுக்க அவரிடமும் எந்த காரணமுமில்லை. அடுத்த பதினைந்து நிமிட ஆட்டோ பயணத்தில் சரி பண்ணிக்கலாம் என்கிறார். அதன்பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆனது, ஓ மை கடவுளே என்று சொல்லும்படி ஆன நிகழ்ச்சிகளை அட்டகாசமாக உருவாக்கிய படம்தான் ஓ  மை கடவுளே. ஆஹா! இயக்குநர் ஆறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கிய படம். அதனால்தான் திரைக்கதை -வசனம்-இயக்கம் என ஹரி, கே.எஸ். ரவிகுமார் ரேஞ்சுக்கு போடுகிறார். படத்தில் தான் யோசித்த விஷயங்களை நுட்பமாக பேசி அதற்கு நியாயம் செய்துவிடுகிறார். எளிமையாக கிடைத்த விஷயங்களின் அருமையை நாம் உணருவதில்லை என்பதுதான் படத்தின் கான்செப்ட். அப்படி கிடைத்த தோழி - மனைவியை தவறவிடும் ஒருவன்,