ஓட்டுநர்களை ஒருங்கிணைக்கும் பிளாக்பக் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40

பிளாக்பக் நிறுவனர்கள், ராஜேஷ், ஹிருதயா ஆகியோருடன் நிறுவன இயக்குநர். ராஜேஷ் யாபாஜி,34 சாணக்யா ஹிருதயா,33 துணை நிறுவனர்கள், பிளாக்பக். ராஜேஷ், ஹிருதயா என இரண்டுபேரும் இணைந்து சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளத்தில் ஒருவர் தனக்கு தேவையான வாகனங்களை பதிவு செய்துகொள்ள முடியும். வாகனம் சென்று கொண்டருக்கும் இடம், அதன் நிலை பற்றி எளிதாக அறியலாம். தொடக்கத்தில், ஐடிசியில் விநியோகப் பிரிவில் ராஜேஷ், ஹிருதயா என இருவரும் வேலை செய்தனர். அப்போது, பொருட்களை விநியோகம் செய்ய சரக்கு போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்திருக்கிறது. இதை நாம் எளிமையாக்கி டிஜிட்டல் செய்தால் வேலை எளிதாக இருக்குமே என இருவருமே எண்ணினர். அதன் அடிப்படையில் வாகன ஓட்டுநர்களிடம் பேசி, அவர்களை திட்டத்தில் இணைத்து பிளாக்பக்எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சேவை முழுக்க சிறுகுறு நிறுவனங்களுக்கானது. லாரி ஓட்டுநர்களில் இருபது சதவீதம் பேர்தான், ஸ்மார்ட்போனை வைத்திருந்தார்கள் என்பது நிலையை சிக்கலாக்கியது. தாங்கள் என்ன செய்கிறோம் என இவர்களிட