தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

 







மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை

உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.

 அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.  ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.  சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

மேலே கூறியுள்ளது  ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அதற்கு செலவு செய்யவும் பணமின்றி தவித்து வருகிறார்கள். இக்காலகட்டம் வேலையிழப்பு அதிகம் ஏற்படுவதாகவும் அமைந்துள்ளது, உடல், மனம் என இரண்டிற்கும் பாதகமான சூழ்நிலையாகியுள்ளது.

மனநிலை சார்ந்த குறைபாடுகளால் ஏற்படும் செலவு 20.7 சதவீதம் அளவுக்கு அழுத்தம் தருவதாக உயர்ந்துள்ளது என ஐசிஎம்ஆர், உலக சுகாதார நிறுவனம் ஆகிய அமைப்புகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வறிக்கை கடந்த மார்ச்சில் வெளியாகியிருக்கிறது.

இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிகளவு மக்கள், மனநிலை குறைபாடுகளால் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு தேசிய அளவில் 10.4 சதவீதம் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் 21.8 சதவீதமாக  உள்ளது.

வீடுகளில் 32.4 சதவீதமாகவும், நாடு தழுவிய அளவில் 59.5 சதவீதம் எனும் அளவிலும் மனநிலைக் குறைபாடுகளுக்கு செலவு செய்யும்  நெருக்கடி உருவாகியுள்ளது. மாதம்தோறும் 18.1 சதவீத அளவில் பட்ஜெட் போட்டு மனநிலை குறைபாடுகளுக்கு மக்கள் செலவு செய்து வருகிறார்கள். மருத்துவச் சிகிச்சை, தங்கும் இடம், உணவு, போக்குவரத்து என தமிழ்நாட்டில் மட்டும் 2,549 ரூபாயை செலவழித்து வருகிறார்கள்.  இதனால் 12.8 சதவீத வருமான இழப்பு ஏற்படுகிறது.

சமூகத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பிரிவினைகள் இருப்பதால் அதைப் பொறுத்துதான் செலவுகள் மாறுகின்றன. இந்த செலவுகளை அனைவராலும் சமாளித்து மீள முடிவதில்லை. ஒப்பீட்டளவில் நகரவாசிகள் மனநல சிகிச்சைக்கு அதிகளவு செலவு செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கல்வி கற்ற மனிதர்கள். இந்தியாவில் 10-12 சதவீத பேர்களுக்கு மட்டுமே முறையான மனநல சிகிச்சைகள் கிடைத்துவருகின்றன. பொதுவாக மனநிலை பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் அளவு 5.3 சதவீதமாகவும், தீவிரமாக மனநல பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் அளவு 0.6 சதவீதமாக உள்ளது.

மது காரணமாக ஏற்படும் மனநிலை பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள் 3  சதவீதமாகவும், மன அழுத்த பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் அளவு 1.4 சதவீதமாகவும் உள்ளது. பாதிக்கப்படுபவர்களின் அளவு அதிகமாக இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்கும் சரியான மருத்துவ சிகிச்சை குறைவுதான். 87.5 சதவீதம் பேர் சைகோசிஸால் பாதிக்கப்பட்டாலும் , சரியான சிகிச்சையைப் பெற முடியாத அவலநிலை நிலவுகிறது. இப்படி சிகிச்சை கிடைக்காத நிலையில் நூறில் ஏழுபேர் தற்கொலை செய்துகொள்ளும் சவாலையும் அரசு எதிர்கொள்கிறது.

மனஅழுத்தம், மனநிலை குறைபாடுகள் காரணமாக ஒருவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டு வறுமையான சூழல் உருவாகிறது. மன அழுத்த குறைபாடுகளை மறைத்து வைத்து வேலை செய்தாலும் அவரால் உற்பத்தித்திறன் சார்ந்து நிலையாக சாதிக்க முடியாது. இதை சாதாரணமாக கருதினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பின்னாளில் சமூக, பொருளாதார ரீதியில் பெரும் சுமையாக மாறுவார்கள்.

2021ஆம் ஆண்டு  அப்சர்வர் ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில், மனநல மருத்துவர்கள் இந்தியாவில் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 0.75 சதவீத மருத்துவர்களே இருக்கின்றனர். 20,250 பேர் தேவைப்படும் இடத்தில் 898 மருத்துவர்களே உள்ளனர்.

2001ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடியில் நேர்ந்த தீ விபத்து பலருக்கும் நினைவிருக்கும். ஒரு ஆன்மிக நிறுவனத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட 26 மனநிலைக்குறைபாடு கொண்ட நோயாளிகள் நெருப்பில் உயிரோடு எரிந்துபோனார்கள். இதற்குப் பிறகு,  உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைப்படி மனநில குறைபாடுகளை தீர்க்கும் மருத்துவ மையங்களைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.

2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த  ஆய்வை குடும்பநலத்துறை அமைச்சகம் நடத்தியது. இதில் , மனநிலை குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலை தெரிய வந்தது. சைக்கியாரிஸ்டுகள் 77 சதவீதமும், சைக்காலஜிஸ்டுகள் 97 சதவீதமும், சைக்கியாட்ரிக் சோசியல் வொர்க்கர்ஸ்  90 சதவீதம் என பற்றாக்குறை இருப்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் மாவட்ட மனநில மேம்பாட்டு திட்டத்தை தொடங்கினாலும் கூட அதில் பங்கேற்கும் மருத்துவர்களின் அளவு போதுமானதாக இல்லை.

தேசிய மனநல கொள்கை 2014, மனநல பாதுகாப்பு சட்டம் 2017 ஆகியவை நடைமுறைக்கு வந்தபிறகு நிலைமை இன்னும் மோசமானது. ஏற்கெனவே பற்றாக்குறை இருந்த நிலையில், சிகிச்சை அளிப்பதும் சிக்கலானது. கூடவே, குடும்பங்களுக்கு மனநல சிகிச்சைக்கு அதிகளவு பணம் செல்வழிப்பதும் இயலாத ஒன்றாக பெரும் சுமையாக மாறியது.

 இன்று இந்தியாவில் உடல்நல குறைபாடுகளோடு மனநல குறைபாடுகளுக்கும் பொருந்தும்படி காப்பீடு உள்ளது. இப்படி சூழல் மாறியதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம்.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விட மனநல சிகிச்சைகளுக்கான கட்டணம் அதிகம். இதனாலும் மக்கள் மனநல குறைபாடுகளுக்கு சிகிச்சை செய்வதை தள்ளிப்போடுகிறார்கள். இதனால், அவர்களின் பிரச்னைகள் இன்னும் தீவிரமாகின்றன. இந்த சூழலில் குறைபாடுகளுக்கான கட்டணம் மேலும் கூடுகிறது.

உடல்நிலை குறைபாடுகள் அளவுக்கு மனநல குறைபாடுகளை பிரச்னைகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால் நோய்க்குறைபாடு தீவிரமாகிறது. அரசு, மனநிலை சிகிச்சைகளை வழங்கும் மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் மனநிலை குறைபாடுகளை எளிதாக ஒருவர் கடந்து வர முடியும்.

சிந்து மேனகா

டைம்ஸ் ஆஃப் இந்தியா

 

 image - pixabay

 

 

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்