இடுகைகள்

எண் 4 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாதிக்காயை சாப்பிட்டால் மாயக்காட்சிகளைப் பார்க்கலாம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  ஆசிய கலாச்சாரத்தில் 4 என்பது அதிர்ஷ்டமில்லாத எண்! உண்மை. மேற்கு நாடுகளில் 13 என்பதை துரதிர்ஷ்டம் தரும் எண்ணாக கருதுகிறார்கள்.  சீனா, கொரியா, தைவான், ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் நான்கு என்ற எண்ணை துரதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கிறார்கள். லிப்டில் நான்கு என்ற எண்  மருத்துவமனை அல்லது பிளாட்களில் இருக்காது. சீனாவின் பெய்ஜிங்கில் நான்கு என்ற எண்ணை வண்டியின் நம்பர் பிளேட்டில் பார்க்க முடியாது. நான்கு என்ற எண்ணின் மீதான பயத்தை டெட்ரோபோபியா (Tetraphobia ) என்று அழைக்கின்றனர். நான்கு என்பதை உச்சரிக்கும்போது வலி, மரணம் என்ற அர்த்தம் வருவதே இதனை மக்கள் தவிர்ப்பதற்கு முக்கியக்  காரணம்.  பற்களில் ஏற்படும் குறைபாட்டை அதனால் தானாகவே சரிசெய்துகொள்ள முடியாது! உண்மை. காரணம், அது எனாமல் கோட்டிங்கை கொண்டுள்ள பொருள். உயிர்வாழும் திசு அல்ல. நாம் கண்ணுக்கு தெரியும் பற்களின் வடிவத்தை க்ரௌன் (Crown) எனலாம், இதன் மேலுள்ள பூச்சுதான் எனாமல். இதனை அமலோபிளாஸ்ட்ஸ் என்ற செல்கள் உருவாக்குகின்றன. பற்கள் பழுதாகி அமலோபிளாஸ்ட்ஸ் (ameloblasts)செல்களை இழந்துவிட்டால், அதனை திரும்ப உருவாக்க முடியாது. இதனால் பற்களில் ஏற்படும் பழ