வடஇந்திய பிரதமரைக் காக்க உயிரை தியாகம் செய்ய முனையும் கமாண்டோ படை தலைவர்!
அசோகா தமிழ் பிரேம்,அனுஶ்ரீ, ரகுவரன், ஆனந்தராஜ் படத்தை தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்களோ என சந்தேகத்தை உருவாக்குகிறது. பிரதமரை காரில் அழைத்துச் செல்லும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில், அவர் சுடப்படுகிறார். பாதுகாப்பு அதிகாரி அசோகா, அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று பாதுகாக்கிறார். பிரதமரை கொல்ல இரு கூலி கொலைகாரர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். நாயகன் அசோகா, பிரதமரை பாதுகாத்து எதிரிகளை அழித்தாரா என்பதே கதை. ஆங்கில திரைப்படங்களை மனதில் கொண்டு உருவாக்கியிருக்கிற படம். நோக்கமே ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்கு இப்படமும் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் பிரதமர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறையிலுள்ள ஐஜி, சதித்திட்டத்தில் தொடர்புள்ளவராக இருக்கிறார். அதனால், கமாண்டோ படையினர் மட்டுமே பிரதமரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். காவல்துறையினர், தரைதளத்தில் மட்டுமே நின்று பணியாற்றுகிறார்கள். அசோகா, தமிழ்நாடு காவல்துறையை நம்புவதில்லை. சரிதான் அதற்கான காரணங்களும் இருக்...