இடுகைகள்

மின்னூல் புதிது. நிறுவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக பொறுப்புணர்வு திட்டம் - தொடக்கம்

படம்
1 சமூக பொறுப்புணர்வுத்திட்டம் உங்கள் பகுதியில் நிறைய வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன . அவை மக்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகின்றன . அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன . இவற்றை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை . இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அதன் உரிமையாளர் , அதில் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்பானதுதான் . இவர்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்பு செய்கிறார்கள் ? ஆண்டிற்கு ஒருமுறை வரும் அறுபத்து மூவர் விழாவிற்கு தயிர் சோற்றை பொட்டலமிட்டு வழங்குவதை நான் கூறவில்லை . நிறுவனங்கள் தாமாக முன்வந்து அவர்கள் தொழில் செய்யும் பகுதிக்கு என்ன விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை சமூக பொறுப்புணர்வு திட்டம் எனலாம் . இன்று இதனை அரசு கட்டாயமாக்கிவிட்டது . இந்திய அரசு இதனை சட்டமாக்கும் முன்பே டாடா , பிர்லா போன்ற நிறுவனங்கள் அவர்களின் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் கல்வி , வேலைவாய்ப்பு , தொழில்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவந்தனர் . இப்படி இவர்கள் செய்யவேண்டும் என்பது அன்று கட்டாயமில்லை . ஏன் செய்கிறார்கள் ? இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைக