இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?

படம்
வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?  இந்தியா விரைவில் மக்களின் வறுமை நிலை குறித்த ஆய்வறிக்கையை  வெளியிட உள்ளது. இந்திய மக்களின் பொருளாதாரம், பெருமளவில் விவசாயம் மற்றும் அதன் துணைத்தொழில்களைச் சார்ந்தே உள்ளது. விவசாயம் இயற்கைப் பேரிடர், நீர்வளம் குறைவு, நிலவளம் போதாமை மற்றும் அரசுகளின் திட்டச்செயலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விவசாயத்தை மீட்க இந்திய அரசு நலிந்த விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. மானிய உதவிகள், பயிர்காப்பீட்டுத் திட்டம், அதிக மகசூலுக்கான கலப்பின பயிர்கள் உருவாக்கம் உள்ளிட்டவை இதில் அடக்கம். சுடும் வறுமை மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவழித்தாலும் அதற்கான பலன்களை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. உலகவங்கி இந்திய அரசுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு இந்திய மக்களின் வறுமைநிலை குறித்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதில் 28.6 கோடிப்பேர் வறுமை நிலையில்  தத்தளிப்பதாக தெரிய வந்தது. இப்பிரிவினரின் தினசரி வருமானம் தோராயமாக 135 ரூபாய் மட்டுமே. ”நடப்பு ஆண்டின்

பத்ம விருது கௌரவம்!

படம்
  இந்திய அரசு, குடியரசு தின விழாவில் நூற்று பனிரெண்டு நபர்களுக்கு பெருமைக்குரிய பத்ம விருதுகளை  அறிவித்துள்ளது பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் மட்டுமே இருந்ததன. பின்னர் அடுத்த ஆண்டு ஜன.8 அன்று பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டன. பாரத ரத்னா விதி! விருதுப் பரிந்துரைகளை பிறர் அல்லது நாமே சுயமாக பரிந்துரைத்து இந்திய அரசுக்கு அனுப்பலாம். இதில் பாரத ரத்னா விருது மட்டும் இந்திய பிரதமர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்குகிறார். இதுவரை 45 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளை மட்டுமே வழங்க முடியும். பத்ம விருதுகளை ஆறுபேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது. இந்தியப் பிரதமரை தலைவராக கொண்ட இக்குழுவில் உள்துறை செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், கேபினட் செயலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். அண்மையில் இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுப்பட்டியலில் 12 விவசாயிகள், 14 மருத்து

பப்ஜிக்கு தடை - மாணவர்களுக்கு உதவுமா?

படம்
பள்ளிகளில் பப்ஜிக்கு தடை? Business Today குஜராத் அரசு, அரசுப்பள்ளிகளில் பப்ஜி விளையாடுவதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டான ப ப்ஜியை உலகளவில் டீம் சேர்த்துக்கொண்டு விளையாடலாம். இதுவரை ரிலீசான ஆப், விளையாட்டு தரவிறக்கம் என அனைத்திலும் இந்த விளையாட்டுதான் முன்னிலை பெற்றுள்ளது. அவ்வளவு ஏன்? பரீக்ஷா பெர் சாச்சா நிகழ்வு டெல்லியில் நடந்தது. அப்போது தன் மகன் ஆன்லைன் கேமில் விழுந்து கிடக்கிறான். படிக்கவே மாட்டேங்கிறான் என ஒரு அம்மணி புகார் கொடுத்தார். உடனே பதிலளித்த மோடி, ஆன்லைன் கேம் என்கிறீர்களே? ப ப்ஜியா? என பேசி அரங்கு அதிர கைத்தட்டல்களைப் பெற்றார். ட்ரெண்டிங் அப்படி பாய்ந்துகொண்டிருக்கிறது. நிலைமை அப்படியொண்ணும் சுமுகமாக இல்லை. டெல்லியைச் சேர்ந்த ப ப்ஜி விளையாட்டு வெறியர், தன் பெற்றோரையும் தங்கையும் கொன்றுவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த சிறுவனுக்கு ப ப்ஜி போதைக்கான சிகிச்சை வழங்கப்படும் அவசர நிலைமை. ஜம்மு காஷ்மீரில் உடற்பயிற்சியாளர் ஒருவர் விளையாட்டு லெவல்களை சூப்பராக ஜெயித்ததற்காக தன்னைத்தானே அடித்து காயப்படுத்திக்கொண்டு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்
படம்
ராகுல்காந்தி குறைந்த பட்ச மாதவருமானம் பற்றி பேச, சாத்தியமா இல்லையா என சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. எதற்கு வம்பு, நேரடியாக ப.சிதம்பரம் அவர்களிடமே கேட்டுவிடுவோம். இந்த திட்டம் எப்படி சாத்தியமாகும்? சமூக பொருளாதார கணக்கெடுப்பு எடுத்து அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் ஏழைகளுக்கு உதவி வழங்கலாமே? நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் என அனைவருக்கும் அவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பாதித்தாலும் குறைந்தபட்ச வருமானத் திட்டம் அவர்களுக்கு உதவும். இப்போது வழங்கப்படும் தொகை குறித்து உறுதியாக கூற முடியாது. ஒரு குடும்பத்தில் மாத வருமானம் எவ்வளவு என கணக்கிட்ட பின்னரே திட்டம் அமலாகும் அல்லவா? இதில் நிறைய சவால்கள் உள்ளனவே? நிச்சயமாக. முதலில் எடுத்த ஆய்வுப்படி ஏழைகளுக்கு உதவுவோம் பின்னர் அனைவருக்குமான திட்டமாக மாற்றலாம். இதற்கான நிதியையும் இப்படி திட்டமிட்டுக் கொள்ளலாம். \ காங்கிரஸ் பாப்புலிச பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதா? நிச்சயமாக இல்லை. 2004-2014 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் அரசு,  பதினாலு கோடிப்பேர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.  வறுமைக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை. நன்றி: தி ஸ

தொல்எலும்புகளின் சுவை எப்படி?

படம்
அர்கன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெனிஃபர் ஏன்?எதற்கு?எப்படிழ மிஸ்டர். ரோனி தொல்பொருட்களை சுவைத்தால் எப்படியிருக்கும்? இதென்ன யுனிபிக் பிஸ்கட்டா, வாங்கும் விலைக்கேற்ப ரசித்து சாப்பிட? முதலில் சாப்பிட வாயருகில் கொண்டுவருவதே பெரிய சாதனை. ஆனால் மனிதர்களில் சிறப்புத்தகுதி கொண்ட அகழாய்வு மனிதர்கள் இதுபோல கிறுக்குத்தனங்களை அடிக்கடி செய்வதுண்டு. பொதுவாக எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்கும். அதுசார்ந்து உப்புச்சுவையோடு டைனோசர் எலும்புகள் ருசிக்கும். உடனே வாயைக் கொப்புளித்து விடுவது டின்னருக்கு நல்லது. ஜெனிபரைப் பாருங்கள். கற்றுக்கொண்டு எலும்புகளை சுவையுங்கள். நன்றி: க்யூரியாசிட்டி

45 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா

படம்
The Independent வேலைவாய்ப்பு சரிவு எவ்வளவு? 2017 மற்றும் 18 ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் சரிவடைந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிட பாஜக தயங்கி வருகிறது. தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலையின்மையின் அளவு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 1972-73 ஆண்டுகளை விட அதிகம். வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை அரசியலாக, முக்கியமான அதிகாரிகள்(பிசி மோகனன், ஜே மீனாட்சி) அரசின் நெருக்கடியைப் பொறுக்க முடியாமல் பதவியை கைவிட்டு விலகியுள்ளனர். முன்னமே வெளியிட தயாரித்த அறிக்கையை வெளியிட தாமதம் செய்தது காரணம் என ஊடகங்களிடம் பேசியுள்ளார் மோகனன். இந்த அறிக்கையில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம் என இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இதற்கு முக்கியக் காரணமாக பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். நன்றி: எகனாமிக் டைம்ஸ்

சுறாக்கள் மனிதனை நீரில் அடையாளம் காண்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர்.ரோனி சுறாக்கள் எப்படி மனிதர்களை நீரில் அடையாளம் காண்கின்றன? நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறி டிவிஷன்களை எப்படி அடையாளம் காண்கிறோம். சூப்பர் விற்பனைப் பெண் அங்கு நிற்கிறாள் என்பதை வைத்தா? கிடையாது. பழவாசனை, கீரைக்கட்டிலுள்ள மண்ணின் மணம், கருவேப்பிலையின் வேறுபட்ட மணம், உருளைக்கிழங்கின் வினோத மணம் என பல விஷயங்கள் இருக்கிறதல்லவா? அதேதான். சுறாக்கள் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்னரே நம்மை கண்டுபிடித்துவிடும் என்று கூறுவதெல்லாம் பூ என்று சொல்லி கற்பனையாகவே நம்மை நம்பவைக்கும் கதை. இரைதேடும் சக்தியைப் பொறுத்தவரை சுறாக்களும் பிற மீன்களும் ஒன்றுபோல்தான் இருக்கும். ஆனால் சில சுறாக்கள் சூட்டிகையாக மனிதர்களைக் கண்டுபிடித்து தாக்குவதற்கும், அதன் மோப்பத்திறனுக்கு எந்த சம்பந்தமுமில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

மூக்கு பத்திரம் ப்ரோ!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி மூக்கில் அடிபட்டால் கண்ணில் கண்ணீர் வருவது ஏன்? கமர்கட்டை கடன் தரவில்லை என சுபாஷ் மூக்கில் குத்தினாலோ, இல்லை தானாகே மூக்கில் ரத்தம் சொட்டினாலோ கண்கள் கண்ணீரை சொட்டி சிம்பதி உருவாக்கும். காரணம் கண்களும், மூக்கும் ஒரே பகுதியாக இணைந்துள்ளதுதான் காரணம். இதனால்தான் காரக்குழம்பை கலந்துகொண்டு எஸ் மை ஹோட்டலில் வெளுத்தால் தலைமுடிகள் சிலிர்த்துக்கொண்டு நிற்க, மூக்கில் ஜலம் வரும் மாயாஜாலம். மூக்கில் இயல்பாக சுரக்கும் திரவம், அதில் புகுந்துள்ள மாசுக்களை இணைத்து வெளியேற்றுகிறது. எனவே மூக்கில் திரவம் சுரப்பது அதனைக் காக்கவே. அதில் ஜில்லெட் ஷேவரை வைத்து சுத்தம் செய்யும் அம்பிகளே இனி அப்படி செய்யாதீர்கள். மூக்கிலுள்ள முடிகள் தூசு தும்புகள் மூக்கினுள் செல்லாதிருக்கும் தற்காப்பு ஏற்பாடு. மூக்கில் முடிகள் பெரும் புதராக வளராமல் பார்த்துக்கொண்டால் போதும். மூக்கு மிகவும் சென்சிடிவ்வான பிரதேசம். கவனம் கவனம்.  

டாப் 5 போதை மருந்துகள்!

படம்
உலகின் டாப் 5 போதை வஸ்துகள் எவை? லான்செட் இதழ், 2007 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி உலகை அடிமைப்படுத்தும் ஐந்து போதைப் பொருட்களை அட்டவணைப்படுத்தினர். மகிழ்ச்சி, உளவியல் தன்மை, தலைவலி, குமட்டல் உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் மார்க் போட்டு போதைப்பொருட்களை அட்டவணைப்படுத்தினர். முதலிடம் ஹெராயின்(3 மார்க்), அடுத்தது கோகைன்(2.4),  நிகோட்டின்(2.2), பார்பிட்டுரேட்ஸ்(2), ஆல்கஹால் (1.9) என அமைந்தது இந்த வரிசை. நன்றி: க்யூரியாசிட்டி

நமது உடலிலுள்ள உண்மையான நீரின் அளவு என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? நமது உடலிலுள்ள தண்ணீரின் அளவு எவ்வளவு? உடனே பாடப்புத்தக பாதிப்பில் எழுபது என முந்திரியாக பதில் சொல்லாதீர்கள். அது தவறான விடை. நீங்கள் பிறக்கும்போது உங்களின் உடலில் அதிகபட்சமாக 78 சதவீத நீர் இருக்கும். பின்னர் படிப்படியாக 70, 65, என குறைவதுதான் உண்மை. டீனேஜ் பையனின் உடலில் அறுபது சதவீத நீரும், பெண்ணின் உடலில் 55 சதவீத நீரும் இருக்கும். ஐம்பது வயதுக்குப் பிறகு ஆண்களின் உடலில் 50 சதவீத நீரும், பெண்களின் உடலில் 45 சதவீத நீரும் இருக்கும். மெல்ல விகிதம் குறைந்து கொண்டே வரும்.  நம் உடலின் எலும்புகளில் 31 சதவீத நீரும், மூளை, இதயம், கல்லீரல் ஆகிய பகுதிகளில் 68 சதவீத நீரும் இருக்கும். உறுப்புகள் ஈரத்தன்மை இல்லாவிட்டால் அதன் இயக்கம் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு. எனவே நீர்ச்சுருக்கம் ஏற்படாதவாறு சரியான இடைவெளியில் நீர் பருகுவது நல்லது. நன்றி: க்யூரியாசிட்டி

விவசாயிகளுக்கு மரியாதை - பத்ம விருதுகள் 2019

படம்
விவசாயிகளுக்கு மரியாதை பனிரெண்டு விவசாயிகள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அதில் நான்கு பேர் மரபான விவசாயம் சார்ந்தவர்கள். அதில் கமலா புஜ்ஹாரியும் ஒருவர். இவர் கோரபுட் மாவட்டத்திலுள்ள(ஒடிஷா) தொன்மையான பயிர்வகைகளை காக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட விவசாயி. இவர் 2002  ஈக்குவடார் இனிசியேட்டிவ் என்ற விருதை தென் ஆப்பிரிக்காவில் பெற்று சாதித்தவர். மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை உடையவர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி தேவி, நிலத்தின் தரத்தை உறுதிசெய்து அதனை நேர்த்தியாக்கும் செயல்பாடுகளை முன்னெடுத்தவர். இவருக்கு பெயரே கிசான் சாச்சி என்பதுதான். 300 க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுவை உருவாக்கிய பெருமை கொண்டவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாபுலால் தாகியா, இரண்டு ஏக்கர் நிலத்தில் நூற்றுபத்து வெரைட்டி பயிர்களை விதைத்தவர். மரபான பயிர்களை 2005 ஆம் ஆண்டிலிருந்து சேகரித்து வருகிறார் பாபுலால் தாகியா. பாடல்களில் மட்டுமே இருந்த பயிர்கள் பெருமளவு அழிந்தாலும் அவற்றை காக்க முயற்சித்து வருகிறார் பாபுலால் தாகியா.  விதைக்கான யாத்திரையை

மிஸ்டர் மஜ்னு - அகில் தேறுவாரா?

படம்
மிஸ்டர் மஜ்னு வெங்கட் அட்லூரி ஜார்ஜ் சி வில்லியம்ஸ் தமன் எஸ்எஸ் ஸ்ரீமணி மஜ்னு படத்தைப் பற்றி மேலே உள்ள ஆட்களைப் பற்றிச்சொன்னாலே புரிந்துவிடும். சென்ற ஆண்டு வெளியான தொலி பிரேமா இயக்குநர் வெங்கட். இந்த ஆண்டு அகில் அக்கினேனியை நம்பி இறங்கி வென்றிருக்கிறார். படத்தின் கதை , கீத கோவிந்தம் என பல படங்களில் பார்த்து சலித்ததுதான். படத்தின் இசையும் ,கேமராவும், அகிலின் அமர்க்களமான நடிப்பும் நம்மை காப்பாற்றுகிறது. காஸனோவாக சுற்றித்திரிபவன், காதலின் அருமை பெருமைகளை உணர்ந்து கிருஷ்ணன் கேரக்டரிலிருந்து ராமனாக மாறுவதுதான் கதை. எப்படி அகில்(விக்கி) பெண்களை கரெக்ட் செய்கிறார் என்பதற்கான அதிக ரெஃபரென்ஸ்கள் கிடையாது. பிரச்னையில்லை. அகில் அசால்டாக அனைத்து பெண்களையும் கையாண்டு, முதலில் முத்தம் தொடங்கி பின் அந்த பெண் கொடுக்கும் அத்தனையையும் பெறுகிறார். அதாவது, அந்த பெண்ணாக கொடுத்தால். நிகிதா(நிக்கி- நிதி அகர்வால்) நடிக்க நிறைய வாய்ப்புள்ளது. ஆனால் மேடம் அழகாக மாடல் போல நிற்கிறார். நடக்கிறார், கோபமாக முத்தம் கொடுக்கிறார். இறுதியாக சொன்ன வார்த்தை தவறாமல் ஒற்றை முத்தம் ஒன்றை

புதிய கட்டுரை நூல்கள் - மனிதநேயத்தின் இருட்டுப் பக்கம்

படம்
புத்தக அறிமுகம் 1.தி புக் ஆஃப் டிலைட் , என்பது சுய முன்னேற்ற நூல் அல்ல. இந்தப் புத்தகம் . பூமியில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்யலாம் என சிறிய பேரகிராப்களாக கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் ரோக்சேன் கே. 2. அன்புக்கும் வெறுப்புக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதனை நன்கு உணர்ந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். இந்த நூலின் ஆசிரியரும் பல்வேறு ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை வைத்து மனிதநேயம், கருணைக்கு பின்னுள்ள கருப்பு பக்கங்கள் புட்டு புட்டு வைக்கிறார். இதில் உங்களுக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அனைத்தும் தெளிவான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் என்பதோடு இதில் உளவியல் பக்கங்களும் வாசிக்க சுவாரசியம் கூட்டுகின்றன. 3. ஃபிகரிங் நூல் அன்பு மற்றும் உண்மை ஆகியவற்றைப் பற்றி வரலாற்று ஆளுமைகள் சொன்ன கருத்துகள், அவற்றின் மீதான பிறரின் பதில்கள், அதன் செல்வாக்கு குறித்து விளக்கியுள்ளார். வானியலாளர் ஜோகன்னஸ் கெப்ளர் தொடங்கி உயிரியல் ஆய்வாளர் ரேச்சல் கார்சன் ஆய்வுகளில் முடிகிறது. 

பத்ம விருதுகள் 2019 - மருத்துவர்கள்

படம்
தமிழக அரசின் கலைமாமணி போல இன்னும் பத்ம விருதுகள் அரசியல் கழகங்களின் விருப்பச்சொத்தாக மாறவில்லை. அதற்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளே சாட்சி. பிரதமரின் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கமிட்டி, பரிந்துரைகளிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறது. இதில் பாரத ரத்னா மட்டும் விதிவிலக்கு. ஆண்டுக்கு மூன்று நபர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை பிரதமர் நேரடியாக குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்க உதவுகிறார். இந்த ஆண்டு சமூகத்திற்கு உழைத்த மருத்துவர்கள், விவசாயிகள், சமூகத்தலைவர்கள் ஆகியோருக்கு பத்ம அங்கீகாரம் கிடைத்துள்ளளது. இதில் சில விருதுகளை அரசியல் நோக்கம் கொண்டதாகவும் கருதலாம். அவற்றை விடுங்கள். மருத்துவத்துறையில் சாதித்தவர்களை பார்ப்போம். ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி பேராசிரியர் ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளர். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான கழகத்தை தொடங்கியவர். தேசிய மருத்துவ அறிவியல் அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையவர். செரிங் நோர்பூ ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக்கில் பெண்களின

மது அருந்தும் பழக்கம் மனிதர்களுக்கு மட்டுமானதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி மது அருந்துவது மனிதர்களுக்கு மட்டுமானதா? நிறைய விலங்குகள் மது அருந்தும் பழக்கம் கொண்டவை. இதற்கு கிளிகள் மற்றும் எலிகளை உதாரணமாக கூறலாம். சில ஆஸ்திரேலிய கிளிகள் சர்க்கரை சுவை கொண்ட மதுவை குடித்திருப்பதை செய்திகள் உறுதி செய்துள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யானைகள் சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் குடித்து கிராமத்தை சூறையாடிய கதையை உலகறியும். - சயின்ஸ் ஃபோகஸ் 

கல்லீரல் சிகிச்சைகளின் வரலாறு!

படம்
1955 ஆம் ஆண்டு சி.ஸ்டூவர்ட் வெல்ச் என்ற மருத்துவர் கல்லீரலை மாற்றி பொருத்த முடியும் என்று கண்டுபிடித்தார். இவர் அல்பானி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர். 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவின் போஸ்டன் நகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநர் ஃபிரான்சிஸ் மூர் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்தார். 1963 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டார்ஸ்ல் , செய்த அறுவை சிகிச்சை படுமோசமாக முடிந்தது. 3 வயதான நோயாளிக்கு செய்த அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கு அதிகமாக ஆபரேஷனும் தோல்வியாகி நோயாளியும் கண்விழிக்கவே இல்லை. அடுத்த செய்த ஆபரேஷனில் நோயாளி  23 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் 200 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற்றன. 1989 ஆம் ஆண்டு தன்னிடம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் உயிர் பிழைத்துள்ளனர் என மருத்துவர் தாமஸ் ஸ்டார்ஸ்ல் கூறினார். 2017 ஆம் ஆண்டு ஹெபடைடிஸ் சி நோய்க்கான சோதனைகள் செய்யப்பட்டன. நன்றி: க்வார்ட்ஸ்

கல்லீரல் என்ன செய்கிறது?

படம்
கல்லீரல் பிட்ஸ் நமது உடலிலுள்ள கல்லீரல் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணி உட்பட 500 க்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது. கல்லீரல் செயல்பாடின்றி மனிதர்களால் இரு நாட்கள் தாக்குபிடிக்க முடியும். மரபணுக்களை எடிட் செய்து கல்லீரல் தொடர்பான இரு நோய்களிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு மது அருந்தி கல்லீரல் பாதிக்கப்பட்டு 37% பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 17 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர். நன்றி: க்வார்ட்ஸ்

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி -

படம்
ஆண் - பெண் பாலின விகிதம் வீழ்ச்சி!  செய்தி:  தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆண் - பெண் விகிதம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஆண் - பெண் பிறப்பு விகிதம் குறித்து வெளியான ஆய்வில் தென் மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த ஆய்வில் பொதுவாக ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் பின்தங்கியிருந்தன. தற்போது இந்திய அரசின் பதிவுத்துறை எடுத்துள்ள ஆய்வுப்படி(2016),  பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் ஆந்திரம், ராஜஸ்தான் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தமிழகம் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரத்தில் 6 வது இடம் பிடித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் 930 என்றிருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 840 ஆக குறைந்துள்ளது.  ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிஷா, உத்தர்காண்டு ஆகிய மாநிலங்களில் பெண்குழந்தைகளின் சதவீதம் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ”தென்மாநிலங்களில் 2007 ஆம் ஆண்டைவிட பெரும் சரிவை பிறப்பு சதவீதம் கண்டுள்ளது. பிறப்பை சரியான முறையில் அரசுத்துறையில் பதிவு செய்யாததும்  சரிவுக்கு காரணம்” என்கிறார் தன்னார்வலரான சாபு ஜார்ஜ். நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - ரேமா நா

ட்ராஃபிக் கேரக்டர்கள் - நீங்கள் தினசரி பார்ப்பவை

படம்
வண்டியில் ஜாலியாக போகிறீர்கள். வீர விக்ராந்த், அவெஞ்சர், கவாசாகி கூட ஓகே. ஆனால் குறுக்கே ஏவியேட்டரில் கட் அடிக்கும் ஸ்பைக் மண்டையர்கள், ஆக்டிவாவில் சைட் கட்டில் வரும் மயிலை மாமா, ரன்வேயில் டயர்களை மேலே தூக்காமல் செல்லும் விமானம் போல செல்லும் சுடிதார் சிங்காரிகள், சைக்கிளில் டிஸ்கவரியின் பியர் கிரில்ஸ் செய்யாத சாகசங்களை செய்யும் பையன்கள் என சென்னை ஒரு வேடிக்கை நகரம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்படி பதிவு செய்த சில கேரக்டர்கள் உங்களுக்காக இன்னோவா எமன் உலகிலேயே மக்கள் அதிகம் பயப்படுவது ஜிஎஸ்டிக்குத்தான் என நினைப்பீர்கள். இன்னோவாவுக்கும் முக்கிய இடமுண்டு. சாலையில் கணிக்க முடியாதவை அரசு பஸ், தண்ணீர் லாரி, ஆட்டோ அதற்கடுத்த இடம் இன்னோவாவுக்குத்தான். இட்லி தின்ற அமர முதல்வருக்கு பிடித்த வாகனம் என்பதாலோ என்னவோ எந்த சிக்னலிலும் நிற்பதற்கு பிடிப்பதில்லை. வேகம்தான். இன்னோவா வருகிறது என்றாலே அனைவரும் உறைந்து நின்றுவிடுகிறார்கள். நான் கூட பிரசவ அவசரத்திற்குத்தான் ஓட்டுகிறார்கள் என வெகுளியாக நம்பியிருந்தேன். ஹார்ன் அடி ரூட்டைப் பிடி ஈரோட்டில் உள்ளூர்காரர்கள் டிரைவராக வேலை ப

கண்பார்வையற்றவர்களுக்கு ஹல்லுசினேசன் உண்டா?

படம்
Steemit ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி கண் பார்வையற்றவர்களுக்கு ஹல்லுசினேசன் தன்மை உண்டா? கண்பார்வையற்றவர்களுக்கு மாயத்தோற்றம் என்பது மிக சாதாரணமான ஒன்று. உலகில் பதினைந்து சதவீதம் பேருக்கு சார்லஸ் போனட் சிண்ட்ரோம் என்ற பிரச்னை உள்ளது. பொதுவாக ஒருவருக்கு கண்களின் பார்க்கும் காட்சிகள் ஹாத்வே இன்டர்நெட் கனெக்ஷன் வேகத்தில் மூளைக்குள் செல்லும். ஆனால் இந்த கண் நரம்புகள் பாதிக்கப்படும்போது மூளை தவித்துப் போய்விடும். இதனால் பார்த்த காட்சிகள், ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு இழந்த கண்களின் இடத்தை தானியங்கியாக பூர்த்தி செய்யத் தொடங்கிவிடும். மாயத்தோற்றம் உருவாவது இதனால்தான். சார்லஸ் போனட் சிண்ட்ரோம் என்பது சுவிஸ் இயற்கை ஆய்வாளர், தன் தாத்தாவிடம் நோய் அறிகுறியைக் கண்டுபிடித்து சொன்ன நன்றிக்காக வைக்கப்பட்ட பெயர். முகங்கள் வானில் பறப்பது போல, குரங்குகள் நடனமாடுவது போன்ற காட்சிகள் தனக்கு தெரிந்ததாக பார்வையற்றோர் மருத்துவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் கூறியுள்ளனர். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

வயதாவது என்பது நோயா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி வயதாவது என்பது நோயா? இயற்கையின் பரிமாண வளர்ச்சி அது. விலங்குகளுக்கு அவற்றின் ஆயுளைப் பொறுத்து அதன் வளர்ச்சி அறிவுத்திறன் கூடும். நமக்கும் அதேபோல்தான். நம் செல்கள் தினசரி இறந்து புதுப்பிக்கப்படுகின்றன. உடலின் செல்கள், ரத்தம் என அனைத்தும் இதேபோல்தான். இயற்கையின் அமைப்பு அப்படி அமைகிறது. இதனைத் தாண்டிய நாம் வாழும் சூழல், தாக்கும் நோய்கள், உண்ணும் உணவு ஆகியவையும் செல் பிறந்து இறப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. நோய்களை சந்திக்காமல் தடுப்பூசி போட்டால் அதிக நாட்கள் வாழ்ந்துவிடலாம் என்ற கனவு வேண்டாம்.  Myotis lucifugus என்ற வௌவால் எதிரிகளே இல்லாமல் 30 ஆண்டுகள்  வாழ்கிறது. எலியை பல்வேறு எதிரிகள் கொண்ட சூழலில் வாழ வைத்தால் ஐந்து மாதங்களே தாக்குப்பிடித்தது. அதேசமயம் ஆய்வகத்தில் வைத்து பராமரித்ததில் மூன்று ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தது.

அதிகரிக்கும் விவாகரத்து- என்ன பிரச்னை?

படம்
விவாகரத்து ஈஸி - பெண்களின் புதிய வாழ்க்கை இதுதான். இந்தியாவில் திருமணமாகாமல் இருப்பவர்களை எப்படி பாக்டீரியா, வைரஸ் போல பார்க்கிறார்களோ, அதே நிலைமைதான் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களுக்கும். 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் விவாகரத்து அளவு 1% என இருந்தது இன்று அதிகரித்திருக்கிறது. அதாவது, ஆயிரத்து ஒருவர் என்ற நிலைமை ஆயிரத்து பதிமூன்று என கூடியிருக்கிறது. மனதளவில் இது எப்படி? என பார்த்தால் அதிர்ச்சியாகிறது. விவாகரத்து பெற்ற நாளை பார்ட்டி வைத்து கொண்டாடும் மனநிலையில் இப்பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக உறவு உடைதலை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இதற்கு அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு கடிதம் எழுதிப்போட்டு முடிவு எடுக்கவில்லை. பொருளாதார சுதந்திரத்தினால் அவர்களாகவே முடிவு எடுக்கிறார்கள். சுயமாக முடிவெடுக்க பெண்களுக்கு இன்று முடிகிறது என்பது சற்று ஆசுவாசமளிக்கிற விஷயம். மகராஷ்டிரம், குஜராத், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் விவாகரத்து விஷயங்களில் முன்னணி வகிக்கின்றன. விவாகரத்து என்றால் தனிப்பட்ட விஷயம் என

நடிப்பிற்கு நியாயம் சேர்ப்பது முக்கியம் - சுஷாந்த் சிங் ராஜ்புத்

படம்
ஒரு நடிகராக உங்களை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் கட்டாயம் இருக்கிறதா? ஒரு நடிகராக அந்த சவாலை நான் ரசிக்கிறேன். நீங்கள் உங்களை எப்போது கம்ஃபோர்ட் ஜோனில் வைத்துக்கொள்ள முடியாது. நடிகர் என்பவர் மற்றவர்களை விட வேறுபட்டவர் அல்ல. நடிகராக கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி புரிந்துகொள்வது, உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துவது முக்கியம். நீங்கள் சில கேரக்டர்களை செய்வது மட்டுமல்ல, அதற்கு நியாயமாக இருக்கவேண்டும். இது எப்போதும் சவால்தான். படம் தோற்றுப்போவதை எப்படி உணர்கிறீர்கள்? நாம் நடிகராக சில விஷயங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறோம். மக்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் அதனை நேர்மையாக பதிவு செய்வார்கள். வரவேற்று கொண்டாடுவார்கள்.  ஆனால் நடிகராக எப்படி நடிக்கவேண்டும், எந்த கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களது சாய்ஸ். நடுத்தர வர்க்க குடும்ப ஆள் நீங்கள். சினிமாவில் நடிக்கும்போது நடிப்புக்கு சவால் என்பதை முக்கியமாக கருதுவீர்களா, அல்லது கிடைக்கும் சம்பளத்தையா? என்னிடம் இருக்கும் பணம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இதன் அர்த்தம், என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதல்ல. என

காவிரி - கோதாவரி இணைப்பு விவசாயிகளை காக்குமா?

படம்
 காவிரி - கோதாவரி ஆறுகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ”காவரி - கோதாவரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தயாரித்துவிட்டோம். 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை மத்திய அமைச்சரவையிடம் அனுமதி பெற்று உலகவங்கியின் நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார். புனித கோதாவரி! மகாராஷ்டிரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள திரியம்பக்கேஷ்வரில் உருவாகும் கோதாவரி 1,465 கி.மீ  தொலைவுக்கு பயணிக்கிறது. மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ஒடிஷா, சட்டீஸ்கர், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி  ஆகிய மாநிலங்களை பொன் கொழிக்கும் பரப்பாக மாற்றும் நீளமான இந்திய ஆறுகளில் ஒன்று இது. மத்தியப் பிரதேசத்தை வடக்குப்புற எல்லையாக கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை வளப்படுத்தி பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது கோதாவரி. செல்லும் வழியில் தார்ணா, பூர்ணா, மஞ்சிரா, பிரான்கிதா, இந்திரவதி ஆகிய துணை ஆறுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு புகையிலை சாகுபடியை அள்ளித் தருகிறது கோதாவரி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆந்

இந்திய மாணவர்களுக்கு எகிறும் டென்ஷன்!

படம்
 இந்தியாவின் நான்கு மாநிலங்களில் எடுத்த ஆய்வில் மாணவ மாணவியர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  இந்திய மாநிலங்களான குஜராத், கோவா, ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்  யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் கார்டியாலஜி பத்திரிகை மாணவ, மாணவியரிடம் செய்த மருத்துவ ஆய்வில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 957 மாணவர்களை ஆய்வு செய்ததில் பலருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. முறையான உடற்பயிற்சி இல்லாததும், உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதும் முதன்மையாக காரணங்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களின் ரத்த அழுத்த விகிதம் 120/80, 125/85, 135/90 எனும் அளவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. ”தற்போதைய மாணவர்களில் 23 சதவீதத்தினருக்கு அபாய அளவில் ரத்த அழுத்த விகிதம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் கடல் மட்டத்திற்கு மேலேயுள்ளதால் ஏற்படும் பாதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதிக ஈர்ப்பதம், வியர்வையால் உடல் தன் இயக்கத்திற்கு தேவையான உப்பை இழக்கிறது” என்கிறா

நீங்களும் வங்கி தொடங்கலாம் எப்படி?

படம்
123RF.com உள்ளூர்ப்பகுதி வங்கி தொடங்குவது எப்படி? பாரத ரிசர்வ் வங்கி இந்தியா முழுக்க ஏராளமான கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருவதை கண்டிருப்பீர்கள். சில மாவட்டங்களிலுள்ள வங்கிகளுக்கு வேறு இடங்களில் கிளைகள் கூட இருக்காது. காரணம், இவை குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் செயல்படும் லோக்கல் வங்கி. செந்தமிழில் ரிசர்வ் வங்கி இதனை உள்ளூர்ப்பகுதி வங்கிகள் என குறிக்கிறது. பல்லாண்டுகளாக நிதிச்சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்களுக்கு வங்கிச்சேவை அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து வருகிறது. உள்ளூர் வங்கி தொடங்குவதற்கு முன்பாக குழுமங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமில்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறுவது மிக முக்கியம். மக்களுக்கான வங்கி! விண்ணப்பத்தில் இணைக்கப்படக் கோரும் ஆவணங்களை இணைத்து வங்கி வாரியக்குழு, தலைவர் ஆகிய தகவல்களுடன் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்தபின், குழுமங்கள் பதிவாளரிடம் வங்கிப்பெயரை பதிவு செய்யலாம். உள்ளூர்வங்கியை குறைந்தது 4 லட்சம் பேர் உள்ள கிராமத்தில் அல்லது குறுநகரத்தில் தொடங்கலாம். பின்தங்கிய நகரில் தொடங்குவது சிறப்பு

தடுப்பூசிக்கு எதிர்ப்பு? - என்னாகும் உலகின் நிலை?

படம்
அண்மையில் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகளை எதிர்க்கும் குழுவினரின் நடவடிக்கைகளை வேதனையுடன் சுட்டிக்காட்டியது. தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் எதிர்காலத்தில் தொற்றுநோய்களை தடுப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. நாடுகளுக்கு மக்களின் வதந்தி பிரசாரங்களோடு, நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி அபாயம், மாசு, வெப்பமயமாதல் ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் தேவை உள்ளது. இதில் முக்கியமானது, யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரியவைப்பதுதான். தடுப்பூசிக்கு எதிர்ப்பு! கி.மு. பத்தாம் நூற்றாண்டில்  சீனாவில் சாங் மன்னரின் ஆட்சி நடந்தபோது, அந்நாட்டில் தடுப்பூசிகள் அமலில் இருந்துள்ளன. பின்னர், 1763 ஆம் ஆண்டு தடுப்பூசியை பிரான்ஸில் மருத்துவர் கட்டி(Gatti) அறிமுகப்படுத்தினார். பதினெட்டாம் நூற்றாண்டில் தடுப்பூசிகளுக்கு எதிராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரெவரெண்ட் எட்மண்ட் மாசே (Edmund Massey), ”இறைவனின் தீர்ப்புக்கு எதிரானது தடுப்பூசிகள் என பிரசாரம் செய்தார். இவரைப் பின்பற்றி தடுப்பூசிகளுக்கான எதிர்ப்பியக்கம் இங்கிலாந்தில் வேரூன்றியது. 1796 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னரால் கண்டுபிடிக்க

பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையா?

படம்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அண்மையில் பெண்களை பலரும் வேலைகளுக்காக தேர்ந்தெடுப்பதில்லை என வருத்தப்பட்டிருந்தார். உண்மையில் நிலைமை என்ன? 2011-12 ஆம் ஆண்டு தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம்(NSSO) பணியில் பெண்களின் அளவு மிக குறைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த ஆய்வு கிராமப்புறங்களை ஒதுக்கிவைப்பதாக உள்ளது. 2004-05, 2009-10 ஆகிய ஆண்டுகளில் விவசாய வேலைகள் கடுமையான சிக்கல்களைச் சந்தித்தாலும் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை பொருளாதார ஆய்வாளர் ஜெயன் போஸ் பதிவு செய்கிறார். 2000 ஆம் ஆண்டை விட 2012 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்பிருந்ததைப் போல பெண்களை யாரும் புறக்கணிக்கவில்லை என்பதற்கு இதுவே சாட்சி. தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பெண்கள் விவசாயம் தவிர்த்த பல்வேறு பணிகளை செய்துவருவது பெருமைக்குரிய செய்தி. மிசோரம்(33%), மேகாலயா(31.7%), தமிழ்நாடு(25%), கர்நாடகம்(24.5%), ஆந்திரம்(23.8%) ஆகிய மாநிலங்கள் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. விவசாயம் இன்று நிலைகுலைந்தாலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலை

பூனை சிரிக்குமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? பூனை சிரிக்குமா? புலியின் வம்சாவளியான பூனை 96 பட இயக்குநர் ச.பிரேம்குமார் கூறியது போல ராஜா போலத்தான் தன்னை நினைத்துக்கொள்ளும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் சேவகன்தான். பூனை சிரிக்குமா என்றால் சோம்பல் முறித்து உதட்டு முடிகளை சரிசெய்யும் போது சிரிப்பது போல தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல.  உரிமையாய் பால்சோறு கேட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ராஜநடை போடும் பூனை சிரிக்குமா என்றால் நான் பார்த்தவரை கிடையாது. பிரச்னையில்லை, நீங்கள் பார்த்தால் கூட மின் மடலிடுங்கள். பதிவு செய்துவிடுவோம். 

சிறந்த காலண்டர் ஆப்ஸ் இவைதான்!

படம்
சிறந்த காலண்டர் ஆப்ஸ்! அவுட்லுக் விண்டோஸில் உள்ள அவுட்லுக் என்றாலே பலருக்கும் எரிச்சலாகிவிடும். ஆனால் நிஜமாகவே 2019 ஆம் ஆண்டு அவுட்லுக் காலண்டர் கொஞ்சம் விஷயமுள்ளதுதான். விவரமாக வேலை பார்த்தால் இமெயிலிலுள்ள பல விஷயங்களை காலண்டரில் இணைத்து வேலை பார்த்து வெற்றிக்கொடி நாட்டலாம். ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்ஸில் பயன்படுத்தும் இந்த காலண்டர் ஆப், லொகேஷன், நண்பர்களின் புகைப்படங்களை இணைப்பது உள்ளிட்ட பல புதிய உற்சாக சங்கதிகளைக் கொண்டுள்ளது. ட்ராப்பாக்ஸ், எவர்நோட் உள்ளிட்ட வசதிகளையும் இதில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  Fantastical ( iOS ) இது ஐஓஎஸ்ஸிற்கு மட்டுமான சிறப்பான கட்டுமானங்களைக் கொண்ட ஆப். அடிப்படையாக காலண்டர் ஆப்பில் என்ன எதிர்பார்ப்பீர்கள். அனைத்தும் இதில் உண்டு. டே டிக்கர் எனும் வசதி குறிப்பிட்ட நாளை சிறப்பாக குறித்து வைக்க உதவுகிறது. மேலும் இதிலிருந்து குறிப்பிட்ட சந்திப்பு குறித்து நண்பர்களுக்கும் செய்தி பரிமாறமுடிவது ஸ்பெஷல்.  CloudCal ( Android ) மேலே பார்த்த ஐஓஎஸ் ஆப் போல இது முழுக்க ஆண்ட்ராய்ட் பசங்களுக்கானது.  ஈஸியாக காலண்டர் நிகழ்வுகளுக்குள் ஜம்ப் ஆகி கா

விண்வெளியில் இறந்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மென்டல் ஃபிளாஸ் விண்வெளியில் இறந்தால் என்னாகும்? பூமியில் புவிஈர்ப்பு விசை நம்மை கட்டுப்படுத்தி பூமியோடு ஒட்டி வைத்துள்ளது. ஆனால் விண்வெளியில் வீரர் இறந்துவிட்டால், மெல்ல அவரது உடைகள் விண்கற்களால் நொறுங்கும். அடுத்து மிகச்சில மணிநேரத்தில் உடலின் ஈரத்தன்மை(ரத்தம், அமிலங்கள்) மெல்ல ஆவியாகும். பின்னர் சுயநினைவு இழப்பு தொடங்கிய பின்னர். அடுத்த 30 நொடிகளில் நுரையீரல் செயலிழக்கும். உடல் மெல்ல காற்றால் நிரம்பி பெரிய பலூன் போலாகி நகரத்தொடங்கும்.  கதிர்வீச்சுகளால் உடலின் தோல் சிதையும். அப்படியே உடல் மட்டும் வெற்றிடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். விடுங்கள். நமக்கு தெரியவா போகிறது? நன்றி: மென்டல் ஃபிளாஸ்

கும்பமேளா குப்பை - அரசு என்ன செய்யப்போகிறது?

படம்
கும்பமேளா குப்பை பிரக்யாராஜில் கும்பமேளா அமர்க்களங்கள் தொடங்கிவிட்டன. தற்காலிகமாக ஒரு நகரமே இவ்விழாவுக்காக அமைக்கப்படுகிறது.  காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவுக்கான கொண்டாட்டங்களும் கும்பமேளாவில் இடையில் உண்டு. பத்து கோடி மக்கள் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகங்கள் 20 லட்சம் பேர் என கணித்துள்ளது. அரசு இதற்கு என்ன செய்கிறது? 1.2 லட்சம் கழிவறைகள், 500 சுகாதார பணியாளர்கள், 1,500 தன்னார்வலர்கள் என திட்டமிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதனைக் கண்காணித்தாலும் எப்படி மக்கள் திரளைச் சமாளித்து குடிநீர் தரத்தை மேம்படுத்துவார்கள் என்பது இன்னும் புரியவில்லை. கழிவறைகளை அரசு கழிவுத்தொட்டியோடு இணைத்துள்ளதாக பேசினாலும் இதனை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்னை ஏற்படாதா என்பது குறித்து குழப்பங்கள் நிலவுகின்றன.  அரசு சொல்லும் கணக்குக்கும், மக்களின் தேவைக்கும் நிறைய தூரம் உள்ளது. கும்பமேளாவுக்கு கூடும் மக்களின் கழிவுகள் பதினெட்டு சதவீதம் அதிகமாக இருக்கும் என அறிவியல் மற்றும் சூழல் நிறுவனம்(புது டில்லி) தெரிவிக்கிற

ஆப் பயன்பாட்டில் சிங்கப்பூர் டாப்!

படம்
SectorQube சிங்கப்பூரைச் சேர்ந்த குடிமகன்கள் 46 ஆப்களை பயன்படுத்தினாலும் போனில் 115 ஆப்களை இன்ஸ்டால் செய்து வைத்துள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. சிங்கப்பூர் மக்கள் உலகிலேயே அதிகமாக 115 ஆப்களை இன்ஸ்டால் செய்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கிறார் வாட்ஸ் அப் அன்னி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஜேட் டான். இதன்மூலம் ஆப்களை போணி செய்வதற்கான சூப்பர் சந்தை தயாராகி உள்ளதாக டெக் கம்பெனிகள் உற்சாகமாகியுள்ளன. “சிங்கப்பூர் மக்கள் தங்களது தினசரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர். வங்கி , தகவல் தொடர்பு, ஷாப்பிங், போக்குவரத்து, டேட்டிங் என ஆப்களின் பட்டியல் நீள்கிறது.” என்கிறார் டேன். கடந்த ஆண்டு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு  பப்ஜி விளையாட்டு ஆப்.அதில் முதன்மையாக உள்ளது. இதற்கடுத்து ஹெலிக்ஸ் ஜம்ப், மொபைல் லெஜண்ட்ஸ் ஆகிய ஆப்கள் இடம்பெற்றுள்ளன. போக்மன் கோ ஆப்பும் பெருமளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க 194 பில்லியன் அளவுக்கு ஆப்கள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 10

காமிக் சன்ஸ் ஃபான்ட் மீது வெறுப்பு ஏன்?

படம்
மைக்ரோசாப்ட் கம்யூட்டர்களுக்காக வின்சென்ட் கானரே கண்டுபிடித்த எழுத்துருதான் டைப்ஃபேஸ் காமிக் சன்ஸ். 1994 ஆம் ஆண்டு கண்டுபிடித்தபோது அதனை யாரும் குற்றம் சொல்லவில்லை. காமிக் நூல்களுக்கான எழுத்துரு போல அமைந்திருந்தது காமிக் சன்ஸ்.  “காமிக் நாய்களுக்கு வைக்கப்படும் பலூன்களில் வசனங்களை டைம்ஸ் நியூ ரோமனில் வைக்க முடியாது” என்றார் வின்சென்ட். விண்டோஸில் அனிமேஷனில் வந்த நாய் இந்த எழுத்துருவைக் கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது. வின்சென்ட் குழந்தைகளுக்காகவே இந்த எழுத்துருவை வடிவமைத்தார். அனைவருக்குமான எழுத்துரு அல்ல என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  ஆனால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் நடப்பதுதானே வாழ்க்கை. காமிக் சன்ஸ், வின்சென்டே நினைத்து பார்க்க முடியாதபடி விளம்பரங்களில் ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ban comic sans என்ற குழு இந்த எழுத்துருவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதனை ஏளனப்படுத்த தொடங்கியது. வின்சென்ட் அதனை இயல்பான நகைச்சுவையோடு நான் பாடிகார்டாக மாறி என் எழுதுத்துருவை காப்பேன் என லண்டன் மியூசியத்தில் பேட்டி தட்டினார்.  காமிக் ச

இந்துவின் பொங்கல் மலர் எப்படியிருக்கு? ஜாலி அலசல்

படம்
இந்து தமிழ்திசை வழங்கும் பொங்கல் மலர் 2019 ரூ.120 பொதுவாக பொங்கல் மலரில் எதுவெல்லாம் இருக்குமோ அதை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு படைப்பாளர்கள், கலைஞர்களின் ஸ்பெஷலாக பொங்கல் மலரை கொண்டு வந்துள்ளது இந்து தமிழ் திசை. கருப்பசாமி அருவா 40 அடி, கோவில்பட்டி இனிப்பு மிட்டாய் என ஜவ்வு மிட்டாயாக எழுதி வைக்காமல் விடுதலை அளித்ததற்கு ஆசிரியர் அசோகனுக்கு ரைட் ஹேண்டில் வணக்கம் வைக்கலாம். இதழின் சிறப்பாக  புதிய தலைமுறை இயக்குநர்களை நம்பிக்கையுடன் அறுவடைத் திருவிழா அன்று அறிமுகப்படுத்தியதை சொல்லலாம். இதில் விக்ரம் சுகுமாறன், பிரசாத் முருகேசன் பற்றிய பதிவுகள் பிரமாதமாக இருந்தன. தேடல் புதிது, எழுத்து புதிது பக்கம், விரைவில் இந்து இலக்கிய இதழைக் கூட வெளியிடுவார்களோ என்று எண்ணும் படி தரமாக இருந்தது. காந்தி பிறந்து 150 ஆண்டுகளானதை ஒட்டி அவர் குறித்த சிறிய பக்கங்களை ஒதுக்கியது மகாத்மாவுக்கு பொங்கல் நாள் முன்னோர் மரியாதை. பட்டம்மாள், பால சரஸ்வதி ஆகிய இரு ஆளுமைகளுக்கும் நூறாவது ஆண்டு அஞ்சலியாக பத்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். நேர்த்தியான பணி. பொங்கல் பற்றிய நினைவுகளை சொல்லுவதில் வடச

நாய் படுக்கைக்கு கீழே பதுங்குவது ஏன்?

படம்
thrillist.com ஏன்?எதற்கு?எப்படி? நாய்கள் திடீரென படுகைக்கு கீழ் பதுங்குவது ஏன்? காலையில் பாசமாய் தன் பாலுறுப்பை நக்கிய வாயுடன் நம் முகத்தையும் நக்கி பாசம் காட்டுவதில் நாய்க்கு இணை யாருமே இல்லை. ஆனாலும் சில சமயங்களில் பொன்னுசாமி ஹோட்டல் பிரியாணி வாங்கித்தாரேன் என்றாலும் வராமல் வம்பு பண்ணி படுக்கைக்கு கீழ் பதுங்கும் நம் வீட்டு பப்பி. அதற்கு என்ன காரணம்? ஆபத்தில்லாத குணம்தான். படுக்கைக்கு கீழே நாய்கள் கிடையைப் போட காரணம், தொந்தரவில்லாத சமரசமே செய்ய முடியாத தூக்கத்திற்குத்தான். இல்லையென்றால் நீங்கள் பந்தை போட்டு நாயை தூக்கிவரச் சொல்வீர்கள். மனிதர்களே 9-5 என மாறிய பிறகு நாய் மட்டும் என்ன ஓவர்டைம் வேலை பார்க்குமா என்ன? ஆனால் அதேசமயம் இருட்டு ஸ்பாட்டில் உட்கார்ந்துகொண்டு ஹீமேன் காமிக்ஸின் நாய் போல நடுங்கிக் கொண்டிருந்தால் ஆபத்து. நாய் பொதுவாக அதிக இரைச்சல், புதிய மனிதர்களுக்கு அஞ்சும். இந்த வகையில் பூனை மிக வெளிப்படையாக தன் விரக்தியை கோபத்தை வெளிக்காட்டி ஓடிவிடும். ஆனால் நாய் அப்படி செய்யாது. பட்டாசு சத்தம், தோப்பில் தேங்காய் போடும் சத்த த்திற்கெல்லாம் நாய்க்கு ஹைப்ப