தைவானை ஒடுக்கும் சீனா!

ஒரே நாடு இரு அமைப்புகள்






சீன அதிபர் தைவான் நாட்டை ஒரு நாடாக இரு அமைப்புகளாக ஹாங்காங் போல இணைந்திருக்க வலியுறுத்தியும் அந்நாடு அதற்கு மறுத்து வருகிறது.

தைவான் சீனாவுக்கு சொந்தமான நாடு கிடையாது. 1949 ஆம் ஆண்டு குவோமின்டாங் கட்சி(கேஎம்டி) சீன அரசுடன் செய்த போரில் தோல்வியுற்றது. இதன் விளைவாக  1992 ஆம் ஆண்டு கேஎம்டி சீன அரசுடன் ஒரே சீனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேர்ந்தது. சீனாவின் தலைமையில் தைவான் சுதந்திரமாக செயல்படும் என ஏற்பாடானது.

சாய் இங்வென் என்ற தைவான் பிரதமர் இதற்கு மறுப்பாக பதிவிட்டுள்ளார். ”தைவான் மக்கள் ஒரே சீனா இரு அமைப்புகள் என்ற ஏற்பாட்டை அன்று முதல் இன்றுவரை எதிர்த்து வருகின்றனர். ” என்று கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு சீனா பிரிட்டிஷூடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஹாங்காங்கை சீனா ஆண்டு வருகிறது. ஒரு நாடு இரு அமைப்புகள் என்ற அமைப்பு அங்கு பல்வேறு மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்களை செய்ய உதவுகிறது. அதை எப்படி தைவான் மக்கள் ஏற்பார்கள் என எதார்த்தமாக கேட்கிறார் தைவான் பிரதமர் இங்வென்.

2014 ஆம் ஆண்டு முதலாக ஹாங்காங்கை சீனாவைப் போலவே கையாண்டா கம்யூனிஸ்ட் அரசு, தன்னை விமர்சித்த ஐந்து பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் தனக்கு எதிராக செயல்படும் எண்ணம் கொண்ட பலரையும் ராணுவம் மூலம் தாக்கி வருகிறது.