கொட்டாவி விடும்போது காது கேட்கும் திறன் குறைவது ஏன்?
SF |
ஏன்?எதற்கு?எப்படி?
கொட்டாவி விடும்போது நம் காது கேட்கும் திறன் குறைவது ஏன்?
இதற்கு காரணம், காதில் உள்ள தசையான டென்சர் டைம்பானி. கோடாரி ஷேப்பிலுள்ள எலும்புடன் இத்தசை இணைந்துள்ளது.
தீபாவளி சமயத்தில் உங்கள் மீது சீனிப்பட்டாசை தூக்கிப்போடும்போது, தண்டபாணி வாத்தியார் கணக்கே வரலையே படவா என ஓங்கி அறையும்போது, ரசத்திற்கு அதிக அப்பளம் எடுத்து லஷ்மி அம்மாவிடம் பிடிபட்டு காது முறுக்கப்படும்போது இத்தசை காதை பாதுகாக்கிறது.
குறிப்பாக அதிக ஒலிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது.