கெட்டுப்போன தக்காளியைக் கண்டுபிடிக்கலாம்!
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன்கள் உணவு, பழைய உணவு என்ற காரணத்தினால் குப்பையில் கொட்டப்பட்டு வீணாகிறது. ஃபிரான்ஹாஃபர் நிறுவனம், இதைத் தடுக்கவென பாக்கெட் ஸ்கேனர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதன்மூலம் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட் ஸ்கேனர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், 1.3 பில்லியன் டன்கள் பழையது என்று கூறப்பட்டு வீணாகின்றன. கழிவை மறுசுழற்சி செய்ய மட்டும் வளர்ந்த நாடுகள் 680 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன.
உணவுப்பொருட்களின் மீது ஒட்டப்படும் Sell by date, use by date ஆகிய லேபிள்களும் உணவு வீணாவதன் முக்கியமான காரணம் என்பதை அங்காடிகள் உணரத்தொடங்கியுள்ளனர்.
அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் செயல்படும் ஸ்கேனர், உணவுப்பொருள் சமைக்க தகுதியானதாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறது. ஆய்வகங்களில் பயன்படுத்தும் இந்த டெஸ்ட் தற்போது விலை குறைவான ஸ்கேனர் மூலம் சாத்தியமாகிறது. மேக கணியம் மூலம் தகவல்களை ஆராய்ந்து தகவல்களை கண்டறிவதும் ஆய்வில் உள்ளது. அடுத்த ஆண்டு சந்தைக்கும் வரும் பொருள் இது.
நன்றி :நியூ அட்லஸ்