மாண்டிசோரியின் கல்வி - நூல் எப்படி?





Image result for montessori





மாண்டிசோரியின் குழந்தைக் கல்வி

மீனாட்சி சிவராமகிருஷ்ணன்

முல்லை பதிப்பகம்


இந்த நூலில் குழந்தையின் அடிப்படைகளை மாண்டிசோரி விளக்கியுள்ளார். ஆனால் அதை எழுதிய மீனாட்சியின் மொழிதான் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது.

தாயின் கருப்பையில் சொகுசாக இருக்கும் குழந்தை, அதிமுயற்சி செய்து வெளியே வருவது எப்படியிருக்கும் என எழுதியிருப்பது புதிதாக உள்ளது.

வளர்ந்த மனிதர்களின் ஒழுங்கு, குழந்தைகளின் ஒழுங்கு என்பதை மாண்டிசோரி எளிமையான உதாரணங்களின் மூலம் விளக்கியுள்ளது அருமை. இதிலும் மனமும், உடலும் ஒருங்கிணைந்து உள்ள புதுமைத்திறன் பற்றி விளக்கும் அத்தியாயம் பரவாயில்லை. புரிந்துவிட்டது.

தியரியாக அதனை மீனாட்சி விளக்கியுள்ளது கடுமையாக உள்ளது. ஆனால் உதாரணங்களிலிருந்து தியரியை புரிந்துகொள்வதை வாசகர்கள் முயற்சிக்கலாம். அது நல்ல முயற்சியாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு என்பதை ஒரு நூலுக்கு ஒருவர் என விதியாக வகுக்காமல் வேறு சிலர் செய்திருந்தால் நமக்கு நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்திருக்கும்.


நன்றி: யெஸ்.பாலபாரதி

- கோமாளிமேடை டீம்