P Chidambaram interview: Minimum income plan aims to wipe out poverty, MGNREGA had limited objective




ராகுல்காந்தி குறைந்த பட்ச மாதவருமானம் பற்றி பேச, சாத்தியமா இல்லையா என சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. எதற்கு வம்பு, நேரடியாக ப.சிதம்பரம் அவர்களிடமே கேட்டுவிடுவோம்.

இந்த திட்டம் எப்படி சாத்தியமாகும்?

சமூக பொருளாதார கணக்கெடுப்பு எடுத்து அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் ஏழைகளுக்கு உதவி வழங்கலாமே? நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் என அனைவருக்கும் அவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பாதித்தாலும் குறைந்தபட்ச வருமானத் திட்டம் அவர்களுக்கு உதவும். இப்போது வழங்கப்படும் தொகை குறித்து உறுதியாக கூற முடியாது.


ஒரு குடும்பத்தில் மாத வருமானம் எவ்வளவு என கணக்கிட்ட பின்னரே திட்டம் அமலாகும் அல்லவா? இதில் நிறைய சவால்கள் உள்ளனவே?

நிச்சயமாக. முதலில் எடுத்த ஆய்வுப்படி ஏழைகளுக்கு உதவுவோம் பின்னர் அனைவருக்குமான திட்டமாக மாற்றலாம். இதற்கான நிதியையும் இப்படி திட்டமிட்டுக் கொள்ளலாம். \


காங்கிரஸ் பாப்புலிச பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதா?

நிச்சயமாக இல்லை. 2004-2014 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் அரசு,  பதினாலு கோடிப்பேர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.  வறுமைக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை.





நன்றி: தி ஸ்க்ரோல்.இன் -ராஜசேகர், ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன். 

பிரபலமான இடுகைகள்