மின்சிக்கனத்தை வழிமொழியும் இங்கிலாந்து பொறியாளர்!


Rodney Briks






எல்இடி மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்!










ஓய்வுபெற்ற பொறியாளர்கள் நம்மூர்ப்பக்கம் என்ன செய்வார்கள்? கோவையின் தண்டாயுதசாமி கோயிலுக்கும், ஈஷாவுக்கும் சென்று தலைமுழுகி துறவி அவதாரம் எடுக்க முயற்சிப்பார்கள். வெளிநாட்டவர்கள் குளிப்பதில் சோம்பல் பட்டாலும் சாகும்வரை நிறைய கண்டுபிடித்துவிட்டுத்தான் போவார்கள் போல. ஓய்வுபெற்ற பொறியாளர் ரோட்னி பிர்க்ஸ் , எல்இடி பல்புகளை வீடு முழுக்க பயன்படுத்தி 90 சதவீத மின் கட்டணத்தை குறைத்துவிட்டார். எப்படி?

இங்கிலாந்திலுள்ள 25 மில்லியன் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வரும் மின் கட்டண பில் மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள். அதோடு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கார்பன் வெளியீடு வேறு உள்ளது. எங்கள் குழுவில் சூழலுக்காக ஜனனியும், கார்பன் வெளியீட்டுக்காக மனோவும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை விட அதிகம் கவலைப்படுகிறவர்கள். அவர்களுக்காகவாவது ரோட்னி எப்படி சாதித்தார் என்பதை கூறவேண்டும்.

ஒளிவீச்சு குறைந்த 40 எல்இடி பல்புகளைக் கொண்டே ரோட்னி மின்சார சாதனையைச் செய்துள்ளார்.  “முதலில் என் வீட்டில் நிறைய பல்புகளை பயன்படுத்தி வந்தேன். அப்போது எல்இடி பயன்படுத்தும் ஆசை இருந்தாலும் விலை பயமுறுத்தியது. முதலில் மின்சார பில்லில் விளக்குகளின் பங்கு 18 சதவீதமாக இருந்தது. தற்போது 1.8% மாக குறைந்துவிட்டது.” என்கிறார் ரோட்னி.

உடனே எரியும் பல்புகளை பிடுங்கிப்போட்டு வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள். அதற்கு முன்பு மின்னாற்றல் சேமிக்கும் ஸ்டார் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துகிறீர்களா என செக் செய்யுங்கள். அது முக்கியம். ஏனெனில் ரோட்னி அதன் மூலமே 20 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறார்.

ஏழு பல்புகளைக் கொண்ட பேக்கை 6.93 பவுண்டுகளுக்கு ரோட்னி வாங்கினார். அரசு எல்இடி விளக்குகளுக்கு மானியம் தருவதை தவறு என்பவர், 2020 க்குள் இதன் மூலம் நூறு பவுண்டுகள் பணத்தை மிச்சப்படுத்தலாம் என நம்பிக்கையுடன் பேசுகிறார்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: கார்டியன். காம் -பேட்ரிக் கோலின்சன்

பிரபலமான இடுகைகள்