சீனாவின் வளர்ச்சியுடன் இந்தியாவை ஒப்பிடுவது முட்டாள்தனம்
நேர்காணல்
அமர்த்தியா சென்
இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுவது அதிகரித்துவருகிறது. கல்வி, சுகாதாரம் என இரண்டு விஷயங்களில் இரண்டு நாடுகளையும் ஒப்பிடுவது சரியா? இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
மனிதர்களின் ஆற்றலை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை பெறுவதில் சீனர்கள் சாதித்து விட்டனர் என்பது உண்மை. ஆடம் ஸ்மித், கார்ல் மார்க்ஸ் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தார். அதேபோல, மார்க்ஸ் மீது மாவோ பெரும் ஆர்வம், ஈர்ப்பு கொண்டிருந்தார். அதனை மாவோ பயன்படுத்திய விதம் சீனாவில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியது. ஆனால் நினைத்த பொருளாதார வளர்ச்சியை அவர்கள் சாதித்து விட்டனர்.
சீனாவிலும் ஏழைகள் உண்டு. ஆனால் அவர்கள் இந்தியாவில் உள்ளவர்களைப் போல தற்கொலையை நாடும் நிலையில் இல்லை. அவர்களுக்கு பள்ளி செல்ல, மருத்துவ சிகிச்சையை நாட தடையேதுமில்லை. நாம் எப்போது சீனாவின் நிலையை அடைவோம் என்று தெரியவில்லை.
இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாம் சீனாவுடன் எப்படி போட்டியிட்டு வெல்வது?
திட்டமிடுதலில் தோற்றுவிட்டோம் என்கிறீர்களா?
நிச்சயமாக. அரசியல்ரீதியில் படுதோல்வி. இந்தியா சுதந்திரமடைந்தபோது நேரு மக்களுக்கு அடிப்படையான கல்வி, சுகாதார வசதிகளை வழங்குவது குறித்து யோசித்து அதற்கான முயற்சிகளை செய்தார். இதுகுறித்து மினு மசானி தன்னுடைய Our India நூலில் எழுதியுள்ளார்.
”நான் ஜாம்ஷெட்பூரில் ஏன் ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்கவேண்டும்? எனக்கு மக்கள் வாசிக்க பள்ளிகள், சிகிச்சைக்கு மருத்துவமனைகள் தேவை” என்று ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவை நன்கு புரிந்துகொண்டு பேசினார். அவருக்கு தெரிந்தது அரசியல்வாதிகளுக்கு புரியாமல் போனதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
அரசு கேட்கும் என்றால் சுகாதாரம் , கல்வி குறித்து நீங்கள் ஆலோசனைகளை கூறலாமே?
நானும் ஜான் ட்ரீசும் எழுதிய நூலிலேயே(The Uncertain Glory) இது குறித்து விளக்கியுள்ளோம். ஆனால் அரசு தான் கூறிய வாக்குறுதிப்படி நடக்கவில்லை. மக்களுக்கும் இதில் ஆர்வமில்லை என்றால் நான் என்ன கூறுவது?
விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு தீர்வு என்ன?
1920 ஆம் ஆண்டு முதலாக இப்பிரச்னைகள் குறித்து பேசி வருகிறேன். கடன் தள்ளுபடி என்பது பிரச்னையைத் தீர்க்காது. என் சிறுவயதில் எங்கள் வீட்டின் அருகிலிருந்த பழங்குடிகள் நிலத்தை பயிரிட்டு அதில் லாபம் கிடைக்காமல் கடன்பட்டு அதற்கு விலையாக நிலத்தை விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இந்த அவலத்தையும் நான் பார்த்துள்ளேன்.
அப்போது விவசாயத்தை நம்பியிருப்பதுதான் பிரச்னையா?
சுகாதாரம், கல்வி குறித்து காங்கிரஸ் அரசும் பெரியளவு கவலைப்படவில்லை என்றாலும் அவர்களது ஆட்சியில் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பது உண்மை. விவசாயத்தை நிறைய மக்கள் நம்பியிருப்பது உறுதியாக பிரச்னைதான். அதோடு நிறைய விஷயங்கள் இணைந்துள்ளன.
நன்றி: லிவ்மின்ட்(நிதேஷ் எம்.கே, சந்தீப் கன்னா)