விடுதலையான பின்னர்....




Image result for international justice mission

ஐ’ம் ப்ரீ என்ற பெயரில் புதிய டேபிள் காலண்டர் ஒன்று சந்தைக்கு வந்துள்ளது. என்ன தீம்? கொத்தடிமையாக இருந்த மீட்கப்பட்டவர்களின் வாழ்க்கைதான் காலண்டர் படங்களாக பிரமிக்க வைக்கின்றன. இதனை இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தன்னார்வ அமைப்பு தயாரித்திருக்கிறது.

”கடந்த எட்டு ஆண்டுகளாக வெவ்வேறு தீம்களில் ஆண்டு காலண்டர்களை உருவாக்கி  வருகிறோம். இந்த ஆண்டு கொத்தடிமையாக இருந்த மீட்கப்பட்டவர்களின் மீது ஏன் வெளிச்சம் பாய்ச்சக்கூடாது என்று நினைத்தோம்” என்கிறார் அமைப்பின் உறுப்பினரான சரோன் ஜபெஷ்.

ஜூன் மாதத்தில் சித்ரா என்ற சிறுமி முகம் கொள்ளாத சிரிப்புடன் மாதத்தை வரவேற்கிறார். திருவண்ணாமலை செய்யாறு அருகே கொத்தடிமையாக மூன்றாம் தலைமுறையாக உழைத்தவரை கடந்தாண்டு மே மாதத்தில்  அரசு மீட்டிருக்கிறது. “என் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியாது. உடனே என்னை திட்டும் முதலாளி, வேலை முக்கியமா? சோறு முக்கியமா? என மிரட்டுவார்” என மிரட்சியை நினைவில் தேக்கி பேசுகிறார் சித்ரா.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வை காலண்டர்களுக்காக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்காரர் ஜோஸூவா ஜோயல் பிரகாஷ்.

”கொத்தடிமை வாழ்விலிருந்து விடுபடாவிட்டால் சுதந்திரம் என்பதை அறியாமலே போயிருப்பேன். இன்று ட்ரைவராக என் கணவர் வேலை செய்கிறார். நாங்கள் பயமின்றி நிம்மதியாக வேலை செய்கிறோம். அடிமையாக காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரை வேலைசெய்தும் நிம்மதியும் கிடையாது. கையில் காசும் கிடைக்காது “ என்கிறார் கொத்தடிமையாக இருந்த மீண்டவரான கல்பனா. காலண்டர் சிறுமி தொலைதூர வானத்தைப் பார்ப்பது போல முடிகிறது. அடுத்த ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் குறியீடாக இப்புகைப்படம் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.

 நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா