சிம் ஸ்வாப் கொள்ளை உஷார் ப்ளீஸ்!






Image result for sim swap


சிம் கார்டு பித்தலாட்டம்!

Image result for sim swap

அண்மையில் மும்பையைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் சிம் கார்ட்டை திருடி 1.86 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டுள்ளது சைபர் கும்பல் ஒன்று. இதில் நாம் அறியவேண்டியது, கும்பலின் சாமர்த்தியத்தையோ, வணிகரின் வெகுளித்தனத்தையோ அல்ல. எப்படி இந்த புதைகுழியிலிருந்து தப்புவது பற்றி மட்டுமே.

”நீங்கள் உங்களது 3ஜி சிம்மை கம்பெனியிடம் சொல்லி 4ஜியாக மாற்றுகிறீர்கள். இதுவே உங்களுக்கு தெரியாமல் மாற்றினால் கொள்ளை எனலாம். இதனை பொதுவாக சிம் ஸ்வாப் என்கிறார்கள்” என்கிறார் ரிதேஷ் பாட்டியா. 

போனை மினி கணினியாகவே பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக புகைப்படம், வங்கி ஓடிபி எண்கள், பண இருப்பு தகவல்கள், பணப்பரிமாற்றம் என இருந்த இடத்தில் உள்ளங்கையிலே செய்யமுடிகிறது. இதனைத்தான் சைபர் கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி தரமான சம்பவத்தை நம் கண்முன்னே செய்து அசர வைக்கிறார்கள். 

உங்களது சிம் கார்டை முடக்கி, உங்களது எண்ணிலேயே புது கார்டை சேவை வழங்கும் கம்பெனியிடம் வாங்கி வங்கித்தகவல்களைப் பெற்று அக்கவுண்டை கொள்ளையடிக்கிறார்கள். 

முதலில் உங்களுக்கு மால்வேர் செய்தியை அனுப்புவார்கள். அப்புராணியாக அதை நீங்கள் திறந்தால் போதும். பின்னர் அவர்களே வங்கி அலுவலர்களாக நடித்து போன் செய்து சில தகவல்களைக் கேட்பார்கள். நீங்களும் கிளிப்பிள்ளை போல உண்மையைச் சொன்னால் அதற்கு பிறகு உங்களுக்கு  அடுத்த டாஸ்க், போலீசில் புகார் கொடுப்பது மட்டுமே. அதனைப் பெற்று உடனே தொலைபேசி சேவை நிறுவனங்களிடம் புது கார்டைப் பெறுவார்கள். 
ஆதார் என்னிடம் இருக்கிறதே? என டென்ஷனாகாதீர்கள். அதையெல்லாம் டூப்பாக செய்த முடியாதா என்ன? 

முதல்வேலையாக பழைய சிம் கார்ட்டின் சேவை கட்டாகும். உங்களுக்கு ஒன்றுமே புரியாது. ஆனால் அதே எண்ணில் கொள்ளையர்கள் வேறு சிம்கார்ட்டை வாங்கி உங்களது காசை லவட்டிவிட்டு அடுத்த கிளிக்கு ரூட் பிடிக்க மேப் போட்டுக்கொண்டிருப்பார்கள். 

உஷார் ப்ளீஸ்.

நன்றி: லிவ்மின்ட் - சாரங்


பிரபலமான இடுகைகள்