இடுகைகள்

சூப்பர் கம்ப்யூட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவை ஒழிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உதவுமா?

படம்
கொரோனாவுக்கு பல்வேறு மருந்துகள் கண்டறிய உலகம் முழுக்க ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். வைரஸ்களின் டிஎன்ஏ மாற்றிக்கொள்ளும் இயல்பால் அதனை அழிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. எந்தெந்த வேதிப்பொருட்களை சேர்த்தால் வலிமையான மருந்தாக உருவாக்க முடியும் என சூப்பர் கணினியை நம்புகின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம், சுமித் எனும் சூப்பர் கணினியை தங்களது ஆய்வுக்காக அணுகியுள்ளது. ஐபிஎம்மின் சூப்பர் கணினி எழுபதிற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை ஒன்றாக கலந்து கொரோனாவிற்கான மருந்தை கூறியுள்ளது. சாதாரணமாக ஆய்வகங்களிலேயே மருந்துகளை கண்டுபிடிக்காமல் ஏன் கணினி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள்? காரணம், சாதாரணமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். வேதியியல் மற்றும் இயற்பியல் தெரிந்த நிபுணர்கள் மூலம்தான் நாங்கள் கணினிக்கான தகவல்களை உருவாக்கியுள்ளோம். வெறும் புரதங்களை மட்டும் கணினி கூறாமல் எந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூட கணினி வரிசைப்படுத்தியுள்ளது என்கிறார் ஐபிஎம் கணினியைச் சேர்ந்த டேவ் துரக். நன்றி - டிஜிட்டல் டிரெண்ட்ஸ்