இடுகைகள்

மன்மோகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வாகத்திற்கு பொறுப்புள

நரசிம்மராவின் நூற்றாண்டு விழா மறக்கப்பட்டுவிட்டதா?

படம்
  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நூற்றாண்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு நரசிம்மராவ் பற்றி நினைக்கும்போது பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வந்திருக்கலாம். காங்கிரஸின் பின்னாளைய தோல்விகளுக்கும், பாஜகவின் எழுச்சிக்கும் பாபர் மசூதி அளவுக்கு வேறெந்த விஷயமும் உதவியிருக்காது என்பதே உண்மை. நரசிம்மராவை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர, தெலுங்கானா அரசுகள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.  இந்தியா அந்நிய செலவாணி பிரச்னையில் தவித்த போது 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவை கடன் பிரச்னையிலிருந்து மீட்க அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றுவரை நாட்டிற்கு உதவி வருகின்றன. தங்களிடமிருந்த  தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்து 200 மில்லியன் டாலர்களை திரட்ட இந்தியா திணறி வந்தது. நரசிம்மராவ் 2004இல் காலமானபோது, நாட்டில் 140 பில்லியன் டாலர்கள் அந்நியசெலவாணி இருப்பில் இருந்தது. இதனை அவர் எளிதாக சாதித்து விடவில்லை. டாக்டர் மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். மன்மோகனை நிதியமைச்சராக நியமித்த

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

படம்
                  அடுத்த தலைவர் ? காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது . உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது . சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட , அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர் . வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம் . பவன் பன்சால் இடைக்கால நிர்வாகி , பொருளாளர் . தலைவராக வாய்ப்புள்ளவர் . எளிமையான மனிதர் . அதுவேதான் பலவீனமும் கூட . அனைவரையும் இணைக்கும் திறமை போதாது . திக்விஜய் சிங் மேலவை உறுப்பினர் , காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர் மூத்த தலைவர் . மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது . ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை தலைவர் , மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர் . மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல . முகுல் வாஸ்னிக் சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . மத்திய

பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!

படம்
open நரசிம்மராவ் வினய் சீத்தாபதி தமிழில் - ஜெ.ராம்கி கிழக்கு பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது. அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர். ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர். இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்

தேர்தலின் கதை 2 - தாமரை மலர உதவிய கை!

படம்
Telegraph India தேர்தலின் கதை 2 பதினேழாவது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வருவார்கள்? மோடியா, ராகுலா என  விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதற்கு முன்னர் தேர்தலின் கதையில் மக்களவைத் தேர்தல் குறித்த வெற்றி, தோல்வி விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இதோ... 1989 பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தை ராஜீவ் கையாண்ட விஷயங்கள் இத்தேர்தலின் போது பேசப்பட்டன. சோசலிஸ்டுகள் இம்முறையும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 143 சீட்டுகளை மட்டுமே பெற்றனர். விபி சிங்கின் தேசிய முன்னணி சிறுபான்மை அரசாக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. இடதுசாரிகளும் பாஜகவும் இந்த அரசுக்கு உதவியாக இருந்தன. ஆனால் ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ, சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைத்தார். 1991 இத்தேர்தலிலும் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை விட்டு கொடுத்துவிட்டது. இதனால் சிறுபான்மை அரசான காங்கிரஸ், நரசிம்மராவை ஆட்சித்தலைவராக கொண்டு ஆட்சி செய்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பெரும்பான்மை பலமின்றி சமாளித்தே ஆட்சி செய்தது சிரிக்காத