இடுகைகள்

வைட்டமின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புத

சப்ளிமெண்டுகளை சாப்பிடுவது அவசியமா?

படம்
pixabay சப்ளிமெண்டுகள் நமக்குத் தேவையா?   உணவில் போதிய சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என எபாங்க் சபாங்க் பானங்கள் வெகு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வருகின்றன. மேலும் அதே நிறுவனங்கள் தனி பிராண்டுகளாக சத்து மாத்திரைகளையும் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரங்களைச் செய்து வருகின்றன.  உண்மையில் இந்த மாத்திரைகள் நமக்கு தேவைதானா? என நாற்பது வயதுக்குப் பிறகு நமக்குமே தோன்ற ஆரம்பிக்கும். அதைப்பற்றி அறிவோம் வாங்க.  உண்மையில் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நாம் இயற்கையில் பெறுவது மிகவும் கடினம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை உலோகங்களை பகுதிப் பொருட்களாக கொண்டவை. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று அப்பொருட்களை டப்பா செட்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டால் விரைவில் உங்கள் அலுவலக நண்பர்கள் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து விடுவார்கள். எனவே நாம் அவர்கள் அந்த மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. உடலை அவ்வப்போது சோதித்து பக்கவிளைவு குறைவான, அடிப்படை விளைவுகள் அதிகமான மருந்துகளை சாப்பிடலாம். காரணம், நாற்பது வயதிற்குப்

போதுமான ஊட்டச்சத்து என்பது உண்மையா?

படம்
pixabay உடல் சிறப்பாக இயங்க வைட்டமின்களும் மினரல்களும் தேவை. ஆனால் இவை உடலில் எந்தளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கான தினசரி அளவுகோல் உள்ளது. அதிகமானால் பல்வேறு சிக்கல்களை உடல் சந்திக்கும். குறைவானால் உங்களுக்கே தெரியும், நோய்கள் உருவாகும். வைட்டமின்கள் பாதிப்பு உடலில் பல்வேறு உணவுப் பொருட்கள் மூலம் மெக்னீசியம் அதிகரித்தால் வயிற்றுப் போக்கு அதிகரிக்கும். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ கூடுதலானால், எலும்புகள் அடர்த்தி குறையும். இந்த சத்து குறைந்தால் கண்களுக்கு லென்ஸ்கார்ட்டில் கண்ணாடி ஆர்டர் செய்யவேண்டியிருக்கும். விட்டமின் சி உடலில் குறைந்தால் மூக்கில் நிற்காமல் ரத்தம் கொட்டத் தொடங்கும். உலகளவில் 2.5 சதவீதம் பேர் அதிகளவு வைட்டமின்கள் உடலில் சேர்வதால் பல்வேறு பாதிப்புகளை அடைகின்றனர். என்ன செய்யலாம்? ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவான பாதுகாப்பான வைட்டமின்களின் அளவு என்று ஒன்று கிடையாது. எனவே, முடிந்தளவு அனைத்து சத்துகளும் கிடைக்கும் அளவு உணவுப்பொருட்களை சாப்பிடுவது அவசியம். பால், முட்டை, அரிசி, முட்டை, இறைச்சி என அனைத்து பொருட்களையும் சாப்பிடுவது அவசியம். இல்லையென