இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!
இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள். எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை. மற்றப...