வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!

 








வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். 


செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை. 


இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை செய்யலாம். நடக்கலாம். நடந்து பயிற்சியான பிறகு, அதை தீவிரமாக்கலாம். ஒரே நாளில் முப்பது, நாற்பது கி.மீ. நடக்க முயன்றால் உங்களை ஐசியுவில்தான் சேர்க்க வேண்டியிருக்கும். ஒருவரின் உடல் அமைப்பைப் பொறுத்து பல்வேறுவிதமான பயிற்சிமுறைகளை தேர்ந்தெடுக்கலாம். அனைவருக்கும் ஒரேவிதமாக உடற்பயி்ற்சி முறை பொருந்தாது. உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அதை காசு கொடுத்து செய்யவேண்டுமென்பதில்லை. அடிப்படையான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டால் நீங்களே மெல்ல செய்யத் தொடங்கலாம். உங்களுக்கு அதிக வயது, எங்கு வாழ்கிறீர்கள் என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. 


- அலைஸ் பார்க்

கருத்துகள்