அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?
மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள்
மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது.
அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து வந்த விஷ்ணு அவர் என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டியுள்ளார். அதை அய்யா வைகுண்டர் வணங்கும் பக்தர்கள் மட்டுமல்ல குறைந்தபட்சம் அவர் யார் என்று தெரிந்தவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். வாய்க்கு வந்ததை கண்ட இடங்களில் உளறிக்கொட்டி, செருப்படி வாங்குவது காவித்தொண்டர்களுக்கு புதிதொன்றும் கிடையாது. ஜீ சுடும் வடை போல இதுவும் ஒரு வடை. வேலைக்கு வரும்போது மூளையை கழற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வருவது அவர்களது சாமர்த்தியங்களில் ஒன்று.
அய்யா வைகுண்டரின் வரலாற்றைப் பார்ப்போம்.
1809ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் பிறந்தார். தென் தமிழ்நாட்டில் அய்யா வழி என்பது முக்கியமான மதம். அதை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும் திரளான மக்கள் பின்பற்றி வருகிறார்கள். வைகுண்டரின் அய்யாவழி மார்க்கம், தீண்டாமை, சாதி மேலாதிக்கம், சமூக பாகுபாடுகளை எதிர்த்து சமத்துவம், சகோதரத்துவத்தை முன்னிருத்திப் பேசியது. அவரின் வழி வந்த மார்க்கத் தலைவர்களும் இதற்காகவே உழைத்து வருகிறார்கள். ஆனால், ஆளுநர் ரவி பேசியது மேற்சொன்ன அடிப்படையான மார்க்க கொள்கைகளுக்கு எதிரானது. எந்த புரிதலும் இல்லாதது. இந்துத்துவத்தில் உள்ள சனாதனத்தைக் காப்பாற்றியவர் என்பது வைகுண்டரின் செயல்பாடுகளை நேரடியாகவே அவதூறு செய்வது என்றே புரிந்துகொள்ளலாம்.
கீழ்சாதியைச் சேர்ந்தவர்களை மேல்சாதி இந்துகள் விலக்கி வைத்து இழிவு செய்தபோது, வைகுண்டர்.
அவர்களோடு ஒன்றாக அமர்ந்து சமபந்தி உணவு உண்டார். அந்த வழக்கத்தை தனது மார்க்கத்தில் கொண்டு வந்தார். கூடவே, பொதுக்கிணற்றில் நீர் அள்ளி குடிக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, முத்திரைக்கிணறு என்ற பெயரில் அவர்களுக்கென கிணறுகளை வெட்டியவர் அய்யா வைகுண்டர். சமத்துவத்தை வெளிப்படுத்த, அய்யாவழி மார்க்கத்தில் பக்தர்கள் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நெற்றியில் தொட்டு நாமம் வைத்திருப்பார்கள். வைகுண்டர் வாழ்ந்த காலத்தில் தீட்டு பட்டுவிடும் என்பதற்காக விபூதி, சந்தனத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொடாமல் விசிறி எறியும் பழக்கம் உண்டு.
அதற்கு மாற்றாக அய்யாவழி மார்க்கத்தில் எந்த சாதியாக இருந்தாலும் பக்தர்களுக்கு நாமத்தை நெற்றியில் தொட்டு வைப்பது வழக்கம். துவையல் பந்தி என்ற பெயரில் பக்தர்களுக்கு சைவ உணவு, மார்க்க நெறிகளை பயிற்றுவித்தார். நிழல் தங்கல் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மையங்களில் பொதுவான சமையல்கூடம், தொடக்க பள்ளிகள் நடைபெற்று வந்தன.
அன்றைக்கு பார்ப்பனர்களை வைத்து நடந்த திருமண நிகழ்ச்சிகளை அய்யா வைகுண்டர் மாற்றினார். அய்யாவழி மார்க்கத்தில் நடைபெறும் திருமணங்களில், பார்ப்பனர்களுக்கோ, வடமொழிக்கோ எந்த வேலையும் இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வியறிவு பெறவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அய்யா வைகுண்டர்.
அன்றைய காலத்தில் சாதி தீண்டாமை தீவிரமாக இருந்தது. அய்யா வைகுண்டர், நாராயண குரு ஆகியோர் ஆன்மிக தன்மையில் தங்களது சீர்திருத்தங்களை மக்களிடையே கொண்டு சென்றனர். இந்த வகையில் நாடார், ஈழவர் ஆகிய இனங்கள் சாதி இழிவிலிருந்து, தீண்டாமையிலிருந்து மெல்ல தப்பின. மேற்சொன்ன இருவரோடு சமகாலத்தில் புலையர்களுக்கு ஆதரவாக அய்யன் காளி இயங்கத் தொடங்கினார். இவரது பதிலடி, ராணுவ தன்மை கொண்டது. அடிக்கு அடி, உதைக்கு உதை என வன்முறையை அடிப்படையாக கொண்டது. அந்த இனத்தில் அய்யன் காளி அவர்களின் செல்வாக்கு பெரியது.
வெ.நீலகண்டன் அய்யாவழி என்ற நூலை சூரியன் பதிப்பகத்தின் வழியாக எழுதி வெளியிட்டிருக்கிறார். குறைந்தபட்சம் எண்பது பக்கம் கொண்ட இந்த நூலைப் படித்திருந்தால்கூட அய்யா வைகுண்டர் எதற்கு உழைத்தார் என புரிந்திருக்கும். மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடங்கினார் என்று நாக்பூர் சென்று அவர்களின் மேடையில் சொன்னால் எப்படியிருக்கும்? எதிர்காலத்தில் மதவாத கைக்கூலிகள் அதற்கும் தயங்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இந்த நேரத்தில் ட்விட்டரில் கோழியார் என்பவர் இட்ட பதிவு நினைவுக்கு வருகிறது.
பிறரது காலை நக்கி பிழைத்து வாழக் கற்றுக்கொண்ட நாய்கள், யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக