இடுகைகள்

ஹரியானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி