இடுகைகள்

கீபோர்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாரண்டிக்கான போராட்டம்!

TVs champ hd-s வாங்கினேன்.இருசக்கர வாகனம் அல்ல. கணினி கீபோர்டு. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் அடையாறில் உள்ள நிறுவன உற்பத்திப்பொருளை குஜராத் விநியோகஸ்தரிடம் ஆர்டர் செய்து வாங்கினேன். 6 நாள் காத்திருந்து வாங்கி வாரண்டியை டிவிஎஸ்சில் பதிவு செய்யமுயன்றால் கீபோர்டில் கொடுத்த க்யூ ஆர் கோடும் வேலை செய்யவில்லை. வாட்ஸ்அப் எண்ணிலும் முறையீட்டை ஏற்கவில்லை. இமெயில் செய்தால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போல ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். அண்ணாசாலைக்கு வந்து கீபோர்டு மாற்றிக்கொள்ளுங்கள் என இறுதியாக கூறிவிட்டனர். இறுதியாக டிவிஎஸ் போல உத்தம நிறுவனம் உலகில் கிடையாது என்று வாரண்டியை விட்டுக் கொடுத்துவிட்டேன்.கீபோர்டை டிவிஎஸ் இணையதளத்தில் வாங்க முடியும் என பின்னர் அடையாளம் கண்டேன்.

ஆபீசிற்கான பொருட்களை வாங்கவேண்டாமா?

படம்
  ஹெக்டார் லேப்டாப் பேக் மேக்புக் ஏர், டெல் எக்ஸ்பிஎஸ் 13 என்ற இரு கணினி வகைகளை உள்ளே வைக்கும் விதமாக பையை வடிவமைத்திருக்கிறார்கள். தோல்பை என்பதால் அழகாக இருக்கிறது. பேனா, பென்சில், அண்ணாச்சி கடையில் வாங்கிய பில்லைக் கூட  நிறைய ஜிப்களைத் திறந்து பைகளில் வைத்துக்கொள்ளலாம்.  பழசாகும்போது இன்னும் அழகான பையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.  விலை ரூ.24, 500 லாகிடெக் எம் எக்ஸ் எர்கோனாமிக் மவுஸ் அசல் எலி என நினைப்பீர்கள். வடிவமைப்பு எலி குனிந்து உட்கார்ந்து எதையோ கொறிப்பது போல உருவாக்கியிருக்கிறார்கள். செயல்பாடு அனைத்து கருவிகளிலும் இணைத்து பணிபுரியும்படி இருக்கிறது. நீண்டநேரம் மவுசைப் பிடித்து வேலை செய்தாலும் மணிக்கட்டு வலிக்காது என்கிறார்கள். விலை 9300. லாகிடெக் வயர்லெஸ் கீபோர்டு ஆப்பிள், ஆண்ட்ராய்ட், விண்டோஸ், குரோம் ஓஎஸ்சில் கூட இதனை வைத்து வேலை செய்ய முடியும். நன்றாக உள்ளது. கைகளுக்கு உறுத்தலாக இல்லாமல் பணி செய்ய உதவும்.  லாகிடெக் காம்போ டச் பார் ஐபேட் புரோ லாகிடெக் பற்றியே நிறைய எழுத காரணம், அந்தளவு புதிதாக ஏதாவது செய்கிறார்கள் என்பதுதான். ஐபேட் புரோவுக்கான பொருள்தான்...