இடுகைகள்

யூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்செயல் என்பதை அறிவியல் ஏற்கிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்புகிறீர்களா? அறிவியல் இதனை விளக்கியுள்ளதா? தற்செயலாக நாம் உருவாக்குவது இதில் சேராது. ஆனால், அரிதாக சில நிகழ்ச்சிகள் அப்படி நிகழ்வது உண்டு. அப்படித்தான் டைட்டானிக் பனிப்பாறையால் உடைந்து நொறுங்குவதை பல ஆண்டுகளுக்கு முன்னரே தி ரெக் ஆப் தி டைட்டன் நாவலில் விவரித்துவிட்டனர். இதில் கப்பலின் பெயர் உட்பட பல விஷயங்கள் ஒற்றுமையாக அமைந்தன. இதனை நிகழ்தகவு தியரிப்படி வேண்டுமானால் விளக்கலாம். கால்பந்து மைதானத்திலுள்ள 23 பேரில் ரெஃப்ரி உட்பட இருவருக்கு ஒரேநாளில் பிறந்த தினம் வர வாய்ப்புள்ளது. அதாவது, 50:50 அளவு. மற்றபடி, அப்படியே முழுக்க அறிவியல் தற்செயல் நிகழ்வுகளை நம்புவதில்லை. ஏனெனில் ரெக் ஆப் தி டைட்டன் என்ற நூல் எழுதி 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து போனது. ஸ்பைடர்மேனுக்கு வயது குறையும்போது அவரது அத்தை என்னவாகுவார் என பஸ்பீடில் யோசித்துப் போட்ட மீம் இது. நன்றி: பிபிசி, பஸ்ஃபீடு