இடுகைகள்

சிரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் கருவிகள் உங்களை கண்காணிக்கின்றனவா?

படம்
மிஸ்டர் ரோனி அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டென்ட் இன்று அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் கூட ஹே கூகுள் என்று குரல் கொடுத்தால் போதும். இவை நம்மை அறியாமல் தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளதா? காளத்தி நியூஸ் மார்ட்டில் ரோஸ்மில்க் கிடைக்குமா என்பது போன்ற கேள்விதான் இது. பதிவு செய்யாமல் என்ன? டிஜிட்டல் உதவியாளர்களது வேலையை உங்களைக் கவனித்து புரிந்துகொள்வதுதான். அவற்றை விழிப்படையச் செய்யும் சில வார்த்தைகளை பதிந்து வைத்திருப்பார்கள். ஹே கூகுள் என்பது போல சிரி என்றால் ஆப்பிளின் இயக்கமுறைமை தன் பணியைத் தொடங்கிவிடும். இப்படி தினசரி பலமுறை விழித்தெழுந்து உரையாடல்களை பதிவு செய்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. நீங்கள் யாரிடமாவது உரையாடிக்கொண்டிருப்பீர்கள். அல்லது நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதில் வரும் சில வார்த்தைகள் டிஜிட்டல் உதவியாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வரும். அப்படி வந்தால் அடுத்த ஆறு நொடிகளுக்கு ஒலிகளை பதிவு செய்யும். இதனை நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. விபத்தாக சில வார்த்தைகளைக் கேட்ட

சிரி பெயர் எப்படி வந்தது?

படம்
சிரி என்ற பெயர் வந்த கதை! ஆப்பிளின் சிரி ஏஐ மென்பொருள். இதனுடன் நீங்கள் உரையாடலாம். தேவையான விஷயங்களைத் தேடச்சொல்லலாம். இதன் பெயர்தான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது. எப்படி வைத்தார்கள் இந்த பெயரை? சிரி என்ற பெயருக்கு வெற்றியைத் தேடித்தரும் தேவதை என்று பொருள் கொள்ளலாம். அல்லது சிம்பிளாக ஐரிஸ் என்பதைத் திருப்பிப்போட்டுள்ளனர் என்று கூட கூறலாம். பொதுவாக பெயர் எளிமையாக வைப்பார்கள் எதற்கு நினைவு வைத்துக்கொள்ளவும் சுலபமாக உச்சரிக்கவும்தான். சின்னத்தம்பி என்பதை தம்பி எனலாம் பொதுவாக இருக்கிறதா சின்னா,சின்னி என அழைக்கலாம். அதுபோலத்தான் சிரி என்பதும். சிங்கள மொழியில் சிரி என்றால் அழகு. அதே சிரி என்ற உச்சரிப்பில் ஜப்பானியபொருள் புட்டம் என வருகிறது. ஸ்பெல்லிங் வேறு ஆனால் உச்சரிப்பு ஒன்றுதான். இன்று ஆப்பிளின் ஐ ஓஎஸ்ஸில் சிரி முக்கியமான அங்கம். அழகான பெண் புகைப்படம். வேஸ்ட் செய்ய வேண்டாமே என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டோம். மன்னிச்சூ.... நன்றி: மென்டல் ஃபிளாஸ்