இடுகைகள்

உலக வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு வங்கத்தை காக்கும் அக்காவும், உலக வங்கியின் நிர்வாக தலைவரான பெண்மணியும்!

படம்
  மம்தா பானர்ஜி  மம்தா பானர்ஜி  அரசியல் தலைவர், மேற்கு வங்கம்.  முதலில் மாநில கட்சியாக இருந்தவர், இப்போது தேசிய கட்சியாக மாறிவிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கான பயன்கள் என்ன என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்.  கருத்துகளையும் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலானவர் என்று பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி. செல்லமாக தீதி. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர். மேற்குவங்கத்தின் முதல்வராக இருக்கிறார்.  தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி தொண்டராக தொடங்கினார். மேற்கு வங்கத்தில் இருந்த இடதுசாரி கட்சியை உடைத்து தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த தற்கு நிறைய இழந்திருக்கிறார். வன்முறையை எதிர்கொண்டிருக்கிறார். இடதுசாரி குண்டர்களின் தாக்குதலில் மண்டையே கூட உடைந்து போயிருக்கிறது. அத்தனையும் பொறுத்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபிறகு திருப்பி கொடுத்தார். மம்தாவின் ஆளுமை, அதிரடிகளால் இடதுசாரிகள் இன்றுவரை மேற்கு வங்கத்தில் எழ முடியவில்லை.  காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மந்திரியாக பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜீவ்காந்தியின் ஆதரவாளராக இருந்தவர், அவர் குண்டுவெ

இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம்@ 60! - ஒப்பந்த வரலாறு, பிரச்னைகள், தீர்வுகள்

படம்
            இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தத்திற்கு வயது 60! கடந்த செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம் , வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இன்று அரசியல்ரீதியான நிலை , சுமூகமாக இல்லை . ஆனால் அதேசமயம் , இருநாடுகளுக்கு இடையில் உருவான நதிநீர் ஒப்பந்தம் (IWT) பல்வேறு தடைகளைத் தாண்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இதன்மூலம் இருநாடுகளும் மனம் வைத்தால் அமைதியான அரசியல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது உறுதியாகியுள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவுகளையும் கடந்து உலகவங்கி இந்த ஒப்பந்தம் உருவாக பெரும் உதவிகளைச் செய்துள்ளது . எந்த இடையூறுகளுக்கும் உட்படாத , தொந்தரவுகளும் செய்யமுடியாத ஒப்பந்தம் என்று கூறப்படும் பெருமை கொண்டது இந்த நதிநீர் ஒப்பந்தம் . 1947 ஆம் ஆண்டு சிந்து , ஜீலம் , செனம் , சட்லெஜ் , பீஸ் , ரவி ஆகிய நதிகளை இருநாடுகளும் பகிர்ந்து நீர் பெறும் முயற்சிகள் தொடங்கவிட்டன . அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டம் . மேற்கு நதிகள் என்று அழைக

பொருளாதார இடைவெளி பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலை! -எதற்காக?

படம்
”சமூகத்தைப் பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலைப்படவில்லை” நேர்காணல் டிமோன் ஃபோர்ட்ஸ்டர் உலகமெங்கும்  அரசியல்ரீதியான அழுத்தம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் மெல்ல பனிமூட்டத்திலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பங்களின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கல்வி அறிவு குறைந்து வருகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் பாகுபாடுகளின் இடைவெளி புதிய அரசியலை நாடுகிறது என உலக நிதி கண்காணிப்பகம் தன் வலைத்தளத்தில் கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? தன் நிதியைக் கையாளுவதில் வேறுபட்ட கொள்கைகளை இந்த அமைப்பு உருவாக்கும் என்று கொள்ளலாமா? நிச்சயமாக. உலக நிதி கண்காணிப்பகம் மட்டுமல்ல உலகளவில் செயல்படும் பல்வேறு அமைப்புகளும் கூட தாராளமயமான வழிகளை சிந்தனைகளை நாடி வருகின்றன. சம்பள பாகுபாடு விஷயங்களை சாமர்த்தியமாக கையாண்டு கடன் பிரச்னைகளைத் தீர்க்க முயல்கின்றன. மானிடரி ஃபண்ட்  அமைப்பு பல்வேறு விமர்சனங்களால் தன் பாதையை மாற்ற தீர்மானித்துள்ளது. மேலும் சந்தை நிலவரத்திற்கான விஷயங்களை மட்டுமே இந்த அமைப்பு கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுத்துள்ளது. சமூக பொருளாதார விஷயங்களை ஒப்புமைப்படுத்த