மேற்கு வங்கத்தை காக்கும் அக்காவும், உலக வங்கியின் நிர்வாக தலைவரான பெண்மணியும்!

 






மம்தா பானர்ஜி 


மம்தா பானர்ஜி 

அரசியல் தலைவர், மேற்கு வங்கம். 

முதலில் மாநில கட்சியாக இருந்தவர், இப்போது தேசிய கட்சியாக மாறிவிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கான பயன்கள் என்ன என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் அறிவிக்கும். 

கருத்துகளையும் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலானவர் என்று பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி. செல்லமாக தீதி. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர். மேற்குவங்கத்தின் முதல்வராக இருக்கிறார். 

தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி தொண்டராக தொடங்கினார். மேற்கு வங்கத்தில் இருந்த இடதுசாரி கட்சியை உடைத்து தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த தற்கு நிறைய இழந்திருக்கிறார். வன்முறையை எதிர்கொண்டிருக்கிறார். இடதுசாரி குண்டர்களின் தாக்குதலில் மண்டையே கூட உடைந்து போயிருக்கிறது. அத்தனையும் பொறுத்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபிறகு திருப்பி கொடுத்தார். மம்தாவின் ஆளுமை, அதிரடிகளால் இடதுசாரிகள் இன்றுவரை மேற்கு வங்கத்தில் எழ முடியவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மந்திரியாக பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜீவ்காந்தியின் ஆதரவாளராக இருந்தவர், அவர் குண்டுவெடிப்பில் இறந்தபோது கட்சியில் மெல்ல அதிகாரத்தை இழந்தார். மெல்ல ஓரம்கட்டப்பட்டார். பிறகுதான் தனக்கென தனி கட்சியை உருவாக்கி வளர்ந்தார். இன்று மாநில முதல்வராக இருக்கிறார். டைம் இதழில் நூறு செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் அக்கா இடம்பிடித்திருக்கிறார். 

டெல் மீ வொய் இதழ்  



அன்சுலா கான்ட்




அன்சுலா கான்ட்

வங்கித்துறை வல்லுநர்

உலக வங்கியின் பொருளாதார அதிகாரி, நிர்வாகத் தலைவர் என பதவி வகிக்கிறார். இந்த வகையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று பிறந்தவர். உத்தரகாண்ட் ரூர்க்கியில் பிறந்தவர், லேடி ஸ்ரீராம் கல்லூரியில் எகனாமிக்ஸ் பட்டம் பெற்றார். 1981ஆம் ஆண்டு எகனாமிக்ஸ் முதுகலைப் பட்டம் பெற்றார். 

1983ஆம் ஆண்டு புரபேசனரி அதிகாரியாக பாரத வங்கியில் பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் அதே வங்கியில் தலைமை மேலாளராக உயர்ந்தார். பிறகு சிங்கப்பூரின் பாரத வங்கி  கிளையில் இயக்குநராக செயல்பட்டார்.  2018ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் பாரத வங்கியின் இயக்குநராக செயல்பட்டார்.  2019ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று, உலக வங்கி குழுமத்தில் நிதி அதிகாரியாக பதவியேற்று வேலை செய்தார். 


கருத்துகள்