நெஞ்சின் ஓரமாய் வலி! - குடும்ப நோய் வரலாறு காரணமா?

 












இதயநோய் ஏற்படுபவர்களின் குடும்ப வரலாற்றை முன்னதாக அறிந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட்  அக்.2021 இதழின் ஆய்வு கூறியுள்ளது. 

கேரளத்தில் 750 குடும்பங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதயநோய் தொடர்பான பாதிப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். இவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தேவை என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

ஐம்பத்தைந்து வயதுக்கு முன்னதாகவே ஒருவருக்கு இதயநோய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என கண்டுபிடிப்பது அவசியம். அப்படி கண்டுபிடித்தால், அவருக்குள்ள 1.5 முதல் 7 சதவீத ஆபத்தை தவிர்க்க முடியும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வு கேரளத்தில் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்டது. 

சுகாதார பணியாளர்கள் 368 குடும்பங்களைச் சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்யவும், மது, புகையிலையை பயன்படுத்துவதை கைவிடவும் கூறினர். இவர்கள் தவிர 382 குடும்பங்கள், பொதுவான மருத்துவ ஆலோசனையை பெற்று வந்தனர். 

பொதுவான ஆலோசனையை ஆண்டுக்கொருமுறை வழங்குவதை விட, வாழ்க்கை முறை மாற்றங்களை ஒருவருக்கு பரிந்துரைத்து குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களை சந்தித்து பேசுவதை ஆராய்ச்சியாளர்கள் சரியான முறை என்று அடையாளம் கண்டிருக்கின்றனர். உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் என்பதை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் பின்பற்ற முடியும். இதன்மூலம் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பதையும் ஆராய்ச்சிக் குழுவினர் புரிந்துகொண்டனர். இதில் முக்கியமானது, குடும்ப உறுப்பினர்களுக்கு ள்ள பிற நோய்களின் பாதிப்பும், அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதும் முக்கியமானது. 

மேற்கு நாடுகளைவிட இந்தியர்களை தாக்கும் இதய நோய்கள் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தாக்குதலைத் தொடங்கிவிடுகின்றன. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதயநோய் சார்ந்த மருத்துவச்செலவுகள் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடும்பங்களைக் கொண்ட இந்தியாவுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்துகிறது.

உலகளவில் இதயநோய் சார்ந்து 13.5 சதவீதம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் இப்படி மரணிப்பவர்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். உலகளவில் இதயநோயால் பதிக்கப்பட்டு இறப்பவர்களோடு ஒப்பிட்டால், இந்தியர்களின் எண்ணிக்கு இருமடங்காக உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் நோய் வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்து உணவுமுறையை மாற்றிக்கொள்ளும் முறை தென்னிந்தியாவில் சிறப்பான பயன்களை அளித்துள்ளது. கடந்த ஆண்டில் (2020) பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் வீடுகளுக்கு சுகாதார ணியாளர்கள் சென்று குடும்பத்தினருக்கு உடல்நலம் பற்றிய அறிவுறுத்தலை தரும் பணியை  மேற்கொண்டு சாதித்துள்ளனர். 

ஒருவர் வாழும் பகுதியில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்தல், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது ஆகியவற்றோடு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நோய்களின் பாதிப்பை குறைக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கட்டுப்பாடாக வைத்திருக்க மருத்துவப் பணியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். இவர்களுக்கு அரசு ஒரு குடும்பத்தை சந்தித்து உடல்நல ஆலோசனைகளை வழங்க ரூ.250 வழங்குகிறது. 

தகவல்

https://www.indiaspend.com/healthcheck/how-families-can-reduce-their-risk-of-heart-disease-779034

 

 






கருத்துகள்