கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம்

 


கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம்


சீனாவில் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது. முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும், ஓய்வூதியம், தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன. நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும், கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின. இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது. உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது. வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப பல்லாண்டுகள் ஆகும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுகள் ஹோட்டல், சுற்றுலா ஆகிய சேவைத்துறை ஊழியர்களுக்கு பல்வேறு நிதிசார்ந்த உதவிகளை வழங்கின. இதனால் அவர்களின் பணியிடங்கள் பாதிக்கப்படவில்லை. பொதுமுடக்கம் தளர்ந்தபிறகு சீனா, பிரான்சில் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளது என லிங்க்டுஇன் வலைத்தளம் கூறியது. பெருந்தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குப்பிறகு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் அதனை வளர்ச்சி எனலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். ஐஎம்எஃப், 2020இல் பொருளாதார வளர்ச்சி 3% குறையும் என்று கூறியுள்ளது. 1930ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டு பெரும் பொருளாதார இடர்ப்பாடு என இதனைக் குறிப்பிடுகின்றனர்.


இரண்டாவது அலை பெருந்தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.8% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்பாதிப்பில் விமானசேவை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது பொதுமுடக்க தளர்வுகள் தளர்த்தப்பட மெல்ல சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நாடுகளில் தொடக்கத்தில் கடுமையான பொதுமுடக்க விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்க, எரிபொருட்கள் விலை பாதாளத்தில் வீழ்ந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தியாளரான ஓபெக் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை வருவாய் சிக்கலில் தவித்தன. ஐரோப்பாவில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை ரூ.1,470 என குறைந்தது. கடந்த 18 ஆண்டுகாலத்தில் இதுவே அங்கு குறைந்த விலையாகும்.


சில்லறை வர்த்தக விற்பனை மெக்சிகோ, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் கடுமையாக சரிந்துள்ளது. இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் விரைவில் நிலைமை சீராகும் வாய்ப்புள்ளது.


https://www.bbc.com/news/business-51706225


கருத்துகள்