ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்ப சாதனையாளர் மெரிசா மேயர்!

 



மெரிசா மேயர்











மெரிசா மேயர்




 சூழல் பொறியாளரான மைக்கேல் மேயர், கலை ஆசிரியரான மார்க்கரேட் மேயர் ஆகியோருக்கும் மகளாக 1975ஆம் ஆண்டு மே 30 இல் பிறந்தவர் மெரிசா. 

அமெரிக்காவைச் சேர்ந்தவரான மேரியா மென்பொருள் பொறியாளர், முதலீட்டாளர், பெண் தொழில்முனைவோர் என பல முகங்களைக் கொண்டவர். கூகுளின் தொடக்க காலகட்டத்தில் அதில் பணிபுரிந்தவர். 

ஸ்டான்போர்ட் பல்கலையில் சிம்பாலிக் சிஸ்டம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்றார். செயற்கை நுண்ணறிவு பற்றியும் படித்தவர் 1997இல் எம்எஸ்சி பட்டம் பெற்றார். 1999இல் கூகுளில் முதல் பெண் பொறியாளராக உள்ளே நுழைந்தார் மெரிசா. இவரது பணியாளர் எண் 20. 

கூகுளின் தொடக்க பக்கத்தை இன்று அழகாக இருக்கிறது என பாராட்டினால் அதற்கான பெருமை மெரிசாவிற்குத்தான் சென்று சேரவேண்டும். இவர் வடிவமைத்த முகப்பு பக்கத்திற்கு பிறகுதான் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. ஜிமெயில், குரோம், மேப் எர்த் ஆகியவற்றிலும் நிறைய பங்களிப்புகளை செய்தார் மெரிசா. 

பிறகு யாஹூ நிறுவனத்திற்கு இயக்குநராக சென்று விட்டார் மெரிசா. 2012இல் அந்த நிறுவனத்திற்கு சென்றவர், 2017இல் தனது பதவியை விட்டு நீங்கினார். யாஹூவின் வணிகம் முழுக்க வெரிசோன் என்ற நிறுவனத்திற்கு கைமாறியதுதான் இதற்கு காரணம். 

பிறகு முன்னாள் ஊழியரான என்ரிக் முனோஸ் டோரஸ் என்பவருடன் இணைந்து சன்ஷைன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தனது 33ஆவது வயதில் போர்ப்ஸ் இதழில் சக்தி வாய்ந்த பெண் என்ற பட்டியலில் இடம்பெற்றார். 2008ஆம்ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் வயது குறைந்த பெண்களில் இவரும் முக்கியமானவர்.  2012,13,14 ஆகிய ஆண்டுகளில் ஆற்றல் வாய்ந்த பெண்களின் பட்டியலில் மெரிசா தொடர்ந்து இடம்பிடித்தார். 

2013ஆம் ஆண்டு பார்ச்சூன் இதழில் நாற்பது வயதுக்கு உட்பட்ட தொழிலதிபர்கள் பட்டியலில் முதல் நபராக இடம்பிடித்து சாதித்தார் மெரிசா. 


டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்